உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் துணைவேந்தாாகச் செயல்பட்டபோது- 733 உயர்வாக இருக்கக் காண்கிறோம். காரணம் என்ன என்று சிந்தித்தீர்களா? நல்ல நிலம் பாடு குறைந்தால், விளைச்சல் குறையும் நீர் குறைந்தாலும் அப்படியே உரம் குறைந்தாலும் தரம் குறையும்: களை மண்டிவிட்டாலும் விளைச்சல் குறைந்துவிடும். நம் மாணாக்கர் பிறநாட்டு மாணவருககு எவ் வகையிலும் இளைத்தவர்கள் அல்லர். இந்தியாவில் இருக்கும் இடர்ப்பாடுகள் பலவாகும். கவனச் சிதைவுக்கு வழிகளும் பலவாகும். எனவே உள்நாட்டில் படிக்கும்போது பலருடைய திறமை முழுமையாக வெளிப்படுவதில்லை. வெளிநாட்டுக் கல்விக்கூடங்களில் இடம் பிடித்துவிட்டால் இடர்ப்பாடுகளும் கவனச் சிதைவுகளும் பெருமளவு குறைந்து விடுகின்றன; ஒருமனப்பட்டுப் படிக்க முடிகிறது. H முதலிடம் பெறும் இந்தியர்கள் நான் ஒருமுறை சோவியத் நாடு சென்றபோது, மாஸ்கோவில் உள்ள லுமும்பா நட்புறவுப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரைக் கண்டு உரையாட வாய்ப்புக் கிட்டிற்று. அக் கழகத்தில் கற்கும் மாணவ மாணவியரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையினர். தேர்வுகளில் அதிக விழுக்காடு பெறுபவர்களும் நம்மவர்களே என்பதை அறிந்து கொண்டேன். அந்த நல்ல பெயர் இன்றும் தொடர்கிறது. நன்றிமிக்க மாணவர் சில நாள்களுக்கு முன் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாத இளைஞர் ஒருவர் என்னைக் காண வந்தார். தன் பெயர் செல்வகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சென்ற ஆண்டு இந்திய சோவியத் பண்பாட்டுக் கழகத்தின் வாயிலாக அவரைப் பட்டப் படிப்பிற்கு, சோவியத் நாட்டிற்கு அனுப்பி வைத்தேனாம், விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ள அவர் என்னைப் பார்த்து வணங்கி நன்றி கூற வந்தாராம். என் காதுகளை நம்ப முடியவில்லை. அவ் விளைஞர் பதினாயிரத்தில் ஒருவராகப் பிறந்துவிட்ட புதுமையான இளைஞராக இருக்க வேண்டும். செல்வகுமாரின் தேர்ச்சிபற்றிக் கேட்டேன். தன் வகுப்பில் தேர்வு எழுதிய இருநூற்று ஐம்பது பேர்களில் எண்மர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார்களாம். அவர்களில் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/752&oldid=788587" இலிருந்து மீள்விக்கப்பட்டது