பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. நினைவு அலைகள் செல்வகுமார் என்று கேள்விப்பட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைத்தேன். நாட்டில் எத்தனையோ செல்வகுமார்கள் உள்ளனர். நேரத்தில் கவனிப்பாரும், தருணத்தில் ஊக்குவிப்பாரும் இன்றிப் பலர் வெம்பிப் போகிறார்கள். 105 புதிய பாடத் திட்டங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் என் பதவிக் காலத்தில் நூற்றைந்து புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பதினெட்டு மருத்துவத்துறை பற்றியது. இருபத்து நான்கு பொறியியல் துறை பற்றியது. பொறியியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பு, பாடமுறை பயிற்சி கிடையாது. அப்படி ஒரு பயிற்சி இருந்தால் நல்லது என்று பொறியியல் பேராசிரியர்கள் சிலர் கருதினர். குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் அறிவுரைப்படி தொழில் நுட்ப வல்லுநர் ஆசிரியர்கள் பயிற்சிக்கான பட்டப் படிப்புக்கு பாடத் திட்டம் உருவாயிற்று. அது நடைமுறைக்கும் வந்தது. பிரிட்டானியாவின் தொழில் நுட்பக் கல்வி வல்லுநரின் பாராட்டையும் பெற்றது.

கூட்டுறவு’ப் படிப்பில் மேல் பட்டப் படிப்பு, உருவாக்கப்பட்டது. உடற் பயிற்சிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், பி.எச்.டி. பட்டமும் வந்தன. செயல்பட்டன. செயலக முறைக்கல்வி, நூல் வெளியீட்டு முறைப் பயிற்சி, சுற்றுலா மற்றும் பொதுமக்கள் தொடர்புக் கல்வி ஆகியவற்றிற்கு இளங்கலை பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பல்துறைக் கல்விக்குப் புதுப்புதுப் பாடத் திட்டங்கள் வந்தால், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி கொடுக்க வேண்டாமா? அதற்கும் ஏற்பாடு செய்தோம். பணி இடை மறு பயிற்சி தமிழக அரசின் தனி நிதி உதவியைக் கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணி இடை மறுபயிற்சி கொடுக்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/753&oldid=788588" இலிருந்து மீள்விக்கப்பட்டது