உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

733 நினைவு அலைகள் என்ற ஊரில், தொல்பொருள் ஆய்வு நடத்தி அருமையான அறிக்கையைக் கொடுத்திருந்தது. அதுவும் எங்கோ மூலையில் தேடுவாரற்றுக் கிடந்தது. அந் நூலையும் வெளியிடச் செய்தேன். டாக்டர் மகாலிங்கம் விரைந்து செயல்பட்டார். அது வெளியான பிறகு, மொகஞ்சதாரோ பற்றி ஆய்வு நடத்தும் பின்லாண்டு நாட்டின் அறிஞர் ஃபர்போலோ அத் துறைக்கு வந்திருக்கிறார். நூலில் இருந்த கல்வெட்டுப் படங்களைப் பார்த்து மகிழ்ந்தார். அவ் வெழுத்துகள் மொகஞ்சதாரோ எழுத்துகளை ஒத்திருப்பதாக முடிவு சொன்னார். திருக்காம்புலியூர் தொன்மையை விளக்குவதற்கும், மொகஞ்ச தாரோவோடு தமிழகத்துக்கு இருந்த தொடர்பினை விளக்குவதற்கும் மேற்படி வெளியீடு ஒரளவாவது உதவலாம். அழகான அச்சில் மற்ற வெளியீட்டகங்களைப் போல சென்னைப் பல்கலைக் கழகமும், நூல்களை அழகாக அச்சிட்டு, கட்டமைப்பு செய்து வெளியிடும் புதிய மரபினை என் காலத்தில் தொடங்கி வைக்க முடிந்தது. - நூல் விற்பனைப் பிரிவு முன்பெல்லாம் பல்கலைக் கழகத்தில் ஏதாவது ஒரு நூலை வாங்குவதென்றால் அதற்கு ஒரு நாளாவது ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அறிஞர்களில் பலர் குறைபட்டுக் கொண்டது என் காதில் பட்டது. மற்ற நூல் விற்பனை நிலையங்களில் இருப்பது போல, விரைந்து விற்பனை செய்யத் தனிப்பிரிவு ஒன்றை ஏற்பாடு செய்தேன். வங்கியில் பனங்கட்டி ரசீதைக் காட்டி நூலைக் கேட்கும் பழையமுறையினை மாற்றிவிட்டேன். உரியவரிடம் நேரில் பனத்தைச் செலுத்தி நூலை வாங்கிக் கொள்ளும் முறையினைக் கொண்டு வந்தேன். வருவாய் வந்தது நூல்களின் விற்பனை, ஆண்டுக்கு நான்கைந்து லட்சம் ரூபாய்களை ஈட்டுமளவுக்கு வளர்ந்தது. புகழ்பெற்ற நூல் விற்பனையாளர்களாகிய ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தின் மூலமும், விற்பனைக்கு ஏற்பாடு செய்தேன். அதுவும் உதவிற்று. பல்கலைக் கழக நூல் வெளியீட்டுப் பிரிவு ஆதாயத்தோடு நடந்தது. பனப்புழக்கம் இருந்ததால், பணம் குறைந்தது என்கிற சிக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/755&oldid=788590" இலிருந்து மீள்விக்கப்பட்டது