பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் துணைவேந்தராகச் செயல்பட்டபோது . . . 737 எழவில்லை. நாள்தோறும் ஒழுங்காக விற்பனைப் பணத்தை வங்கிக் கணக்கில் சேர்க்கத் தவறவில்லை. பழைய கனக்குகளைப் பார்வை யிட்டேன் கனக்கு என்ற உடனே பல்கலைக் கழகத்தின் பொதுக் கணக்கும், பல்துறைக் கணக்குகளும், நினைவுக்கு வருகின்றன. பொதுப் பணத்தைத் தேவைகளின் விரைவு அறிந்து செலவு செய்யவேண்டும்; அளவறிந்தும் செலவு செய்ய வேண்டும். ஒழுங்கான வழிமுறைகளை ஒட்டியும் செலவிட வேண்டும். இவற்றுக்கும் மேலாகப் பொதுப்பணம் பற்றிய வரவு செலவுக் கனக்கினைச் சரியாக வைத்திருக்க வேண்டும். நேரா நேரத்தில் கணக்குக் காட்டும் அளவு, விழிப்பாகச் செயல்பட வேண்டும். மேற்படி நெறிமுறைகளை நான் எல்லாப் பதவிகளிலும் பின்பற்றினேன். பொதுக்கல்வி இயக்குநராய் இருந்தபோதும், உயர்கல்வி இயக்குநராய் இருந்தபோதும் வரவுசெலவு பற்றிய குறை குறிப்புகளை’ நேரடியாகக் கவனித்து ஒழுங்குபடுத்தும் நெறியிலிருந்தேன். எனவே, அக்கால கட்டத்தில் வெட்கப்பட வேண்டிய குற்றங்குறைகள் ஏதும் நிகழவில்லை. நான் பல்கலைக் கழகத் துணைவேந்தரான சிலநாள்களுக்குள் பழைய கணக்குத் தணிக்கைக் குறிப்புகளைக் காணநேர்ந்தது. அதில் இருந்த மூத்த குறை குறிப்பு ஒன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தியது. அடுத்து வந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் சில, குறை குறிப்புகள் சேர்ந்திருந்தன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்போருக்கு சென்னைப் பல்கலைக் கழகக் கணக்குகள் குறைகள் மலிந்ததாகத் தோற்றம் அளிக்கும். நான் அப்படிக் கருதி மலைத்துவிடவில்லை. டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், உளமாரத் தவறு செய்யமாட்டார். அலுவலகப் பிழைகள் சுணக்கங்கள் ஏற்பட்டிருக் கலாம் என்று எனக்குத் தோன்றிற்று. எனவே, நனைந்து சுமக்க் முற்பட்டேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்திய கோப்பையும் துருவி ஆய்ந்தேன். கண்டது என்ன? வரவு செலவை ஒழுங்கு செய்தேன் பல்கலைக் கழகம் பாடநூல் வெளியிடுவதற்காகச் சென்னை யில் இருந்த அச்சகம் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து இருந்தது. அச்சகத்தார் நூலை அச்சிட்டு உரியநேரத்தில் குறிப்பிட்ட படிகளைக் கொடுத்துவிட்டனர். சேர வேண்டிய பாக்கியைப் பல்கலைக் கழகத்திடம் கேட்டு வாங்குவதற்குமுன், அச்சக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/756&oldid=788591" இலிருந்து மீள்விக்கப்பட்டது