உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 நினைவு அலைகள் உரிமையாளர் இறந்துவிட்டார். அவருக்குச் சந்ததி இல்லை. வாரிசு எவராவது உண்டா என்று தேடும் முயற்சியில் பல திங்கள் ஈடுபட்டும் தகவல் இல்லை. எனவே கணக்கு தீர்க்கப்படவில்லை. இத் தகவலைத் தணிக்கையாளருக்குச் சுட்டிக்காட்டாததால் அக் கோப்பு பன்னிரண்டு ஆண்டுகளாக நிறைவு பெறாமலே நடைமுறைக் கோப்பாகவே இருந்துவிட்டது. "அச்சகத்துக்குக் கொடுத்த முன்பணத்துக்குக் கணக்கு தீர்க்கவில்லை” என்ற குறையோடு அந்தக் கோப்பு உயிரோடு இருந்தது. அதைப் பார்த்தவர்கள் அத்தனைபேரும் துனிப்புல் மேய்ந்ததற்குப் பதில், ஒரு அரைமணி நேரம் துருவிப் படித்திருந் தால், குறைக் குறிப்புக்கே இடம் இல்லாமல் போயிருக்கும். அப்போதைக்கு எப்படியாவது காட்டிவிடுவோம் என்ற அணுகுமுறையைக் கைக்கொண்டதால் தீர்க்கமுடியாத பெருங் குறைபோல் அது காட்சி அளித்தது. குறை காண முடியாத கணக்குகள் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது, பிற நாடி நரம்புகளாகிய பிற அலுவலர்களும், பணியாளர்களும் நேர்மையுள்ள அளவு விழிப்போடும், பொறுப்போடும், பழிக்கு அஞ்சியும் செயல்பட வேண்டும் என்பது எனக்குத் தெளிவாயிற்று. நிற்க, பன்னிரண்டு ஆண்டு குறை குறிப்புகளை'யும் ஆய்ந்து பார்த்தேன். தக்க நடவடிக்கை எடுத்தேன். குறிப்புகளுக்கு விடை கொடுத்தேன். அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறைகளாகக் கருதப்பட்ட அத்தனையும் கைவிடப்பட்டன. என்னுடைய ஆறாண்டு துணைவேந்தர் பதவிக் காலத்தில் கணக்கில் குறை ஏற்படாதபடி கண்காணித்து 'குறை குறிப்பே இல்லாத வரவு செலவு கணக்குகளைக் கொடுக்க முடிந்தது. அதற்குப் பல்கலைக் கழகப் பணியாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பு பெரிது ஆகும். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். 83. பெரியார் விருப்பம் என்னுடைய துணைவேந்தர் பத்வியில் முதல் மூன்று ஆண்டு முடிவதற்கு ஆறு திங்கள் இருந்தது. அப்போது தந்தை பெரியார் சென்னைக்கு வந்திருந்தார். அவரைக் கானச் சென்றேன். ஒருவருக்கொருவர் உடல் நலம் பற்றிக் கேட்டுக் கொண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/757&oldid=788592" இலிருந்து மீள்விக்கப்பட்டது