பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 நினைவு அலைகள் மகிழ்ச்சி. சட்டப்படி நீங்கள் மேலும் இரண்டுமுறை இங்கேயே துணைவேந்தராகத் தொடரலாம். அப்படியே தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்” என்று கூறி, குளிர்பானம் கொடுத்து விடை கொடுத்தார். தேர்வுக்குழு அமைந்தது பின்னர் முதலமைச்சரைக் கண்டு ஆலோசனை கேட்டேன். அவர் விரும்பியவாறே திரு. கே. சிவானந்தம் அவர்களை அணுகிக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒப்புக் கொண்டார். முதல்வர் எண்ணியவாறு அவர் சார்பில் திரு. டி. எம். நாராயணசாமி பிள்ளையை மற்றொரு உறுப்பினராக இருக்க வேண்டினேன். அவரும் இசைந்தார். முந்தியவரைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவும், அடுத்தவரைப் பல்கலைக் கழகப் பேரவையும் நியமித்தன. ஆளுநர், நீதிபதி ராமபிரசாதராவை, உறுப்பினராக நியமித்தார். மூவரும் கூடி மூவர் பெயர்களைக் கொடுக்க வேண்டும். பெரியார் தெம்பூட்டினார் - == இதற்கிடையில் தந்தை பெரியார் சென்னைக்கு வந்து பொது மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நான் அடிக்கடி பார்த்தபடி இருந்தேன்.ஆனால், தொல்லை கொடுக்கவில்லை. பெரியார் தாமாகவே துணைவேந்தர் பதவி பற்றிய வதந்திகளைக் கூறுவார். “நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று எனக்குத் தெம்பு ஊட்டுவார். 28. 7.1972 அன்று காலை எட்டரை மணிக்கு அலுவலகத்தில் இருந்த என்னோடு, ‘விடுதலை ஆசிரியர்திரு. கி.வீரமணி தொடர்பு கொண்டார். "ஐயா, பெரியார் திருச்சிக்குப் புறப்பட ஆயத்தமாயிருக்கிறார்; வண்டி காத்துக் கொண்டிருக்கிறது. புறப்படுவதற்கு முன் தங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம். முடிந்த அளவு விரைவில் வரச் சொல்கிறார்” என்ற செய்தியைச் சொன்னார். ஐந்து நிமிடத்தில் பெரியாரைக் காணப் புறப்பட்டேன். பெரியார் திடலுக்குச் சென்றதும் என்னை திரு. வீரமணி பெரியாரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டுவிட்டு கதவுகளைச் சாத்திவிட்டு, விலகிக் கொண்டார். பெரியார் சொன்னபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/759&oldid=788594" இலிருந்து மீள்விக்கப்பட்டது