உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ിLifിutil لهl(Dبا ић o 741 "ஐயா ...,... .தி.த. . . த்துக் கொண்டிருந்தேன். உங்களி . .பி... . . ( நேரே திருச்சிக்குப் புறப்பட போகிlே). lேliறு இ வு கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் உங்களை , துணைவேந்தாக நியமிக்க ஒப்புக் கொண்டார்கள்” என்று பெரிய . பி. ப். "ஐயா. இத்தனை நாள் இருந்த தாங்கள் இன்னும் மூன்று நாள் சென்னையில் தங்கி இருந்தால் நன்றாயிருக்கும்; அரசுக்கு எங்கெங்கிருந்தோ பெரிய பரிந்துரைகள் வருகின்றன. இந்த நெருக்கடியில் முடிவை மாற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கலாம். தயவுசெய்து மேலும் மூன்று நாள் எனக்காகச் சென்னையில் தங்குங்கள்” என்று நான் வேண்டிக் கொண்டேன். “தங்களிடத்தில் சொல்வதற்கென்ன? இனி மாறமாட்டார்கள். நேற்று இரவு திரு.கி.வீரமணியைத் துாது அனுப்பினேன். நான் சொன்னபடி அவர் முதலமைச்சரையும், பிறகு கல்வி அமைச்சரையும் பார்த்து என் செய்தியைச் சொல்லிவிட்டார்; அதற்கு அப்புறம்தான் இருவரும் ஒப்புக் கொண்டு அவரிடம் உறுதி கூறி அனுப்பியிருக்கிறார்கள்” என்று சொன்னதோடு முழு ரகசியத்தையும் தெரிவித்தார். பெரியார் சொல்லி அனுப்பிய செய்தி «Sтайт6лг? - ப்ெரியா ர் சொன்ன ரகசியம் "நான் நெ. து. சு.வுக்கு உத்தியோகம் வாங்கித் தருவதற்காகத் துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரைக்கவில்லை. பொது நன்மையைக் கருதி நான் சொல்லி அனுப்புகிறேன். அவர் துணை வேந்தராக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு உதவி அவர் இருப்பது பாமரர்களுக்குப் பாதுகாப்பு. இதற்காகத்தான் அவருக்குத் துணைவேந்தர் பதவியைக் கொடுக்கும்படி சொல்லுகிறேன். அதற்கு விருப்பமில்லை என்றால் இனிமேல் அவர்களுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இராது. அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று கடைசியாகச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் அப்புறம்தான் இசைந்தார்கள். இனிமேல் மாறினால் வருவதை அனுபவிக்கட்டும்” என்று பெரியார் கூறியபோது நான் பதறிப் போனேன். 'ஐயா, என்னால் விவகாரம் இவ்வளவுக்கு முற்றிப் போயிற்றே என்று வருந்துகிறேன்; என்னை மன்னியுங்கள்” என்று நான் கழுதழுத்த குரலில் வேண்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/760&oldid=788596" இலிருந்து மீள்விக்கப்பட்டது