உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 நினைவு அலைகள் பெரியார் சினம் கொண்டார் "ஐயா, மன்னிக்கனும். நீங்களும் இப்படிப் பேசினால் எப்படி? நீங்களா பதவி கேட்டு வந்தீர்கள்? நான்தானே கட்டாயப்படுத்தி அனுப்பினேன். அடுத்த முறைக்கும் ஒப்புக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். நீங்கள் எனக்கு வேண்டியவர்கள் என்பதற்காகவா உங்களுக்குப் பதவி வாங்கிக்கொடுக்க முயல்கிறேன். நீங்கள் செய்கிற நல்ல வேலைக்காக அல்லவா, உங்களை விடாமல் இருக்கச் சொல்கிறேன். முன்பு பல்கலைக் கழகப் பக்கம் தலை காட்டாத குடிசைவாசிகள் எல்லாம், உரிமையோடு உங்களிடம் வருகிறார்கள். மேல் பட்டப் படிப்பிற்கு இடம் வாங்கிக் கொண்டு போகிறார்கள்: எவர் காலத்தில் இப்படி நடக்கும்? ஏழை எளியவர்களுக்குப் பாதுகாவலர் ஒருவரை வைத்து விட்டுப் போகத்தான் நான் முயற்சி செய்தேன். அதனால் ஏற்பட்ட விவகாரம் பற்றிக் கவலைப் படாதீர்கள். பழையபடி தாராளமாக உதவி செய்யுங்கள்” என்று கூறி என்னைச் சமாதானப்படுத்தினார். நான் அஞ்சியபடி நடந்தது அப்புறம் பெரியாரைத் திருச்சிக்கு அனுப்பிவிட்டு, நான் அலுவலகத்துக்குத் திரும்பினேன். பெரியார் அவ்வளவு உறுதியாகச் சொன்னபோதும் எனக்கு உள்ளுர அச்சம் இருந்தது. ஏன்? சிவானந்தத்துக்கு இருதய நோய் தேர்வுக் குழு கூடி மூவர் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆயத்தம் செய்து கையெழுத்து இட்டார்கள். அடுத்த நாள் பெரிய இடத்திலிருந்த ஒருவர் மற்றொரு பெயரைச் சேர்க்கும்படி தேர்வுக்குழுவை நெருக்கினார். முதல்நாள் முடிவு செய்த பட்டியல் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்படவில்லை. எனவே குழு மீண்டும் கூடிற்று. முதலில் சேர்க்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்படுவதால் அவருக்குப் பதில் இவரைச் சேர்க்கிறோம் என்று கூடுதல் பெயர் ஒன்றைப் பரிந்துரை செய்யக் குழு முயன்றது. திரு. சிவானந்தம் நெடுநேரம் எதிர்த்துப் பார்த்தார். இறுதியில் அவரும் இசைய நேர்ந்தது. பட்டியலில் மேற்படி திருத்தம் செய்தார்கள். வீடு திரும்பிய சிவானந்தம், தம் மனைவியை அழைத்து, “நான் இப்போது ஒரு பெரிய பாவம்செய்துவிட்டு வந்திருக்கிறேன்; அது நெ. து. சு. வுக்குக் கேடாக முடியலாம்; அந்தத் துரோகத்துக்கு மன்னிப்புக் கிடைக்காது” என்று கூறியபடியே கண்ணிர் வடித்தார். சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/761&oldid=788597" இலிருந்து மீள்விக்கப்பட்டது