உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750– நினைவு அலைகள் பத்தாயிரம் ரூபாய்களைத் திரட்டி, சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து, என் பெயரில் சொற்பொழிவு அறக்கட்டளை ஒன்றை நிறுவிப் பெருமைப்படுத்தினார்கள். அவர்களுக்கும், திருச்சி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். 85. ராஜாஜி மறைவு - பெரியார் பெருந்துயரம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் அதன் ஆட்சிக் குழுத் தலைவராக விளங்கிய டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் அசோகா ஒட்டலில் இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடுசெய்து எனது மணிவிழாவைக் கொண்டாடச் செய்தார். அவ் விழாவில் டாக்டர் மால்கம் ஆதிசேவுை:யா கலந்துகொண்டு எனக்கு வாழ்த்துரை வழங்கினார். கராச்சி மாநாட்டில் நடந்த அனைத்து ஆசிய தொடக்கக் கல்வி மகாநாட்டில் ஒரு குழுவின் தலைவராக இருந்து நான் ஆற்றிய பணியை, விவரித்துப் பாராட்டினார். தமிழ்நாட்டில் முழுமையான வயது வந்தோர் எழுத்தறிவு இயக்கத்திற்கு நான் தீட்டிக் கொடுத்த திட்டத்தை வரவேற்றுப் போற்றினார். அதை யுனெஸ்கோ வட்டாரங்கள் வரவேற்பதையும் வெளிப்படுத்தினார். இது சமயத்திற்குப் பேசிய உபசார மொழி அல்ல என்பது பின்னர் விளங்கிற்று. எப்படி? எனக்கு டாக்டர் பட்டம் தர முயற்சி 1975இல் அவர் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக விளங்கி நடத்திய முதல் பட்டமளிப்பு விழாவில் எனக்கு டி.லிட்பட்டம் கொடுக்க வேண்டுமென் று ஆலோசித்தார். ஒப்புதல் கிடைக்காததால் ஆட்சிக் குழுவுக்குக் கொண்டுவரவே இல்லை. “நெ. து. சு. வுக்குக் கொடுக்காமல் நான் எண்ணியிருந்த மற்ற மூவருக்கும் கொடுப்பதில்லை” என்ற வைராக்கியத்தால் மற்றவர் களுக்கும் டி லிட் பட்டம் கிடைக்காமல் போயிற்று. ராஜாஜி மறைவு - பெரியாரின் பெருந்துயரம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களின் இறுதியில் தந்தை பெரியார் சென்னைக்கு வந்து தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நானும் என் மனைவி காந்தம்மாவும் பெரியாரைக் கானச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/769&oldid=788605" இலிருந்து மீள்விக்கப்பட்டது