பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மணிவிழாவைப் பெரியார் நடத்தி வைத்தார் 749 மணிவிழா மலர் மணிவிழா வாழ்த்திதழ் அளித்து மகிழ்ந்ததோடு எனது மணிவிழா மலர் ஒன்றைச் சிறப்பாக வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தினார்கள். பி. எஸ். ஜி. அறக்கட்டளைக்கும், அருமை நண்பர் ஜி. ஆர். தாமோதரனுக்கும் நன்றி கூறச் சொற்கள் போதா, ol. - \ - திரு. பி.ஆர்.ராமகிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தும் பொறியியல் கல்லூரி, பிற கல்லூரிகள் ஆகியவற்றின் சார்பில் கூட்டாக விழா எடுத்தார்கள். - கோவை சு. அவினாசிலிங்கம் மனை இயல் கல்லூரியில் என்னையும் என் மனைவியையும் அழைத்து விழாக் கொண்டாடினர். இவர்களுக்கும் பெரிதும் நன்றி உடையோம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்தி-வேலூரில் நடக்கும் கந்தசாமி கண்டர் கல்லூரி, எனது மணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. அக் கல்லூரியும் எனது மணிவிழா மலரினை அழகுபட, வெளியிட்டுச் சிறப்பு செய்தது. அம் மலரில் சேர்ந்துள்ள தந்தை பெரியார், தொழிலதிபர் மகாலிங்கம், இந்தியக் கல்வி அமைச்சகத்தின் ஆலோசகர் திரு. ஜே. பி. நாயர் ஆகியோர் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாம். o இக் கல்லூரி எடுத்த எனது மணிவிழாவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மாண்பமை திரு. பி.ஆர். கோகுலகிருஷ்ணன் அவர் கள் தலைமை ஏற்றுப் பொன்னாடை போர்த்தி என்னை வாழ்த்தி னார். அவருடைய பேரன்பிற்கு நான் எப்படி நன்றி சொல்ல? கண்டர் கல்லூரி விழாவுக்கு வித்தாக விளங்கிய திரு. பரிமள கண்டர் அவர்களை நினைக்கும்தோறும் என் நெஞ்சம் நெகிழ்கிறது. ஆழ்ந்த இறைப்பற்றும், நிறை பணிவும் கொண்டிருந்த பரிமள கண்டர் சிறந்த பண்பாளர். என்பால் கரை காணாத அன்பு கொண்டிருந்தார். தம்பியர் பெற்ற செல்வம் யானுமே பெற்ற தன்றோ என்று எண்ணி, என் வளர்ச்சியையும், தொண்டையும் கண்டு பூரித்தார். அவர் எடுத்த மணிவிழா நினைவு இன்றும் பசுமையாக இருக்கிறது. அவருக்கு இருகரங்களாக விளங்கிய திரு. ரத்தினசபாபதிக்கும், திரு. ஷண்முகசுந்தரத்துக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். o - திருச்சி நகரத்தில் உள்ள கல்லூரிகளின் சார்பில் திருவாளர் டி. எம். நாராயணசாமி பிள்ளை அவர்களை முன்நிறுத்தி, எனது நண்பர்கள் எனது மணிவிழாவைக் கொண்டாடினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/768&oldid=788604" இலிருந்து மீள்விக்கப்பட்டது