பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 நினைவு அலைகள் முதல்வரின் பேட்டி கிடைக்கவில்லை. - விழா முடிந்து, கலையும்போது என்னைச் சில மணித்துளிகள் காத்திருக்கும்படி கட்டளையிட்டார். ஆசிரியர் வீரமணியை அழைத்து, + "இரண்டொரு நாளில் துணைவேந்தர் முதலமைச்சரைப் பேட்டி கான ஏற்பாடு, செய்யுங்கள். இருவரும் கலந்து பேசித் திட்டம் இடட்டும். எழுத்தறிவு இயக்கத்தை உடனே தொடங்கட்டும்” என்று கூறினார். “நல்லது ஐயா! நான் இன்னும் சில நாள்களுக்குச் சென்னையில்தான் இருக்கிறேன். முதலமைச்சர் எங்கே, எப்போது பேட்டிக்கு அழைத்தாலும் செல்ல ஆயத்தமாயிருக்கிறேன்” என்று பதில் கூறினேன். நல்ல எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் பெரியார் கண்களில் ஒளிவிட்ட Ø(IT. i எவர் காரணமோ? எவர் தடையோ? எவருடைய கருத்து மாறுபாடோ? பேட்டியும் கிடைக்கவில்லை. தமிழகம் தழுவிய எழுத்தறிவுத் திட்டமும் உருவாகவில்லை. * எல்லோரும் எழுத்தறிவு பெற்ற நன்னிலையைக் காணாமல் பேரறிஞர் கண்மூடியதைப் போல, எல்லோரும் கற்ற சமுதாயத்தைக் காணாமல், தந்தை பெரியாரும் பின்னர் கண்மூட நேர்ந்தது. என் மணிவிழாவில் முதல்வர் டாக்டர் கலைஞர், நாவலர், இராசாராம் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். வெளியூர்களிலும் மணிவிழா கொண்டாட்ப்பட்டது நான் எவ்வளவு தடுத்துச்சொல்லியும் கேளாமல் எனது மணிவிழாவைச் சென்னைக்கு அப்பால் சில நகரங்களில் அன்பர்கள் கொண்டாடினார்கள். கோவை, திருச்சி, வே லூர் ஆகிய மூன்று ஊர்களில் எடுத்த விழாக்கள் சிறப்பாக அமைந்தன. கோவையில் பி. எஸ். ஜி. அறக்கட்டளையின் சார்பில் திரு. ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் கலை, விஞ்ஞானக் கல்லூரியில் எனது மணிவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தார். அவர்கள் குடும்பத்தில் மூத்தவராகிய திரு. ஜி.எஸ்.ராமசாமி என்ற பெரியவரைக் கொண்டு எனக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டது. என் கைகளில் ஒர் பொன்னாடையைக் கொடுத்து, என் மனைவி காந்தம்மாவுக்குப் போர்த்தச் செய்து, கண்டு மகிழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/767&oldid=788603" இலிருந்து மீள்விக்கப்பட்டது