பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a. என் மணிவிழாவைப் பெரியார் நடத்தி வைத்தார் 747 எழுத்தறிவு பெறுவதற்கு உடனடியாகத் திட்டம் தீட்டிச் செயல்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோளும் விடுத்தார். “சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தொடர்ந்து மூன்று முறைதான் பதவி வகிக்கலாம் என்பதைத் திருத்தி மீண்டும் பழையபடி எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்வதற்குச் சட்டத் திருத்தம் செய்யவேண்டும். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், பல ஆண்டுகள் தொடர்ந்து துணைவேந்தராய் இருந்ததால், என்ன குறை நேர்ந்துவிட்டது? நெ. து. சுவையும் விட்டு விடாமல் முடிந்தவரை வைத்திருந்து அவரிடம் வேலை வாங்கிக் கொள்ள வேண்டும். அது சமுதாயத்தின் கீழ்த்தட்டுகளில் இருப்பவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.” - இப்படி ஒரு கருத்தையும் வெளிப்படுத்தினார். அது எனக்குச் சங்கடமாயிருந்தது. நான் எனது ஏற்புரையில் வயது வந்தவர் எழுத்தறிவை மையப்படுத்திப் பேசினேன். அப்போது, “தமிழ் மக்களின் இழிவுகளுக்கு எல்லாம் வேதனையும் வெட்கமும் படுகின்ற தந்தை பெரியார், மக்களுடைய தற்குறித் தன்மை பற்றியும் வெட்கமும் வேதனையும் படுவது இயற்.ை அவரால் ஆளாக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவும் அதேபோல், வேதனையும் வெட்கமும் பட்டார். எனவே, என்னை அழைத்து எல்லோர்க்கும் எழுத்தறிவு கொடுப்பதற்கான ஒரு ஐந்தாண்டு திட்டத்தைத் தீட்டிக் கொடுக்கச் சொன்னார். அதைச் செய்ததும் நான் வேறு வேலைக்குப் ஆக = போய்விட்டேன். எழுத்தறிவு இயக்கம் நான் மேற்கொண்டு பேசுவதற்கு முன், தந்தை பெரியார்,"ஐயா, மன்னிக்கனும்” என்று உரத்த குரலில் குறுக்கிட்டார். நான் ஏதும் புரியாது திகைத்து நின்றேன். “எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது அப்படி என்ன மலையைத் துரக்குகிற பெரிய காரியமா? முதலில் நூறு, நூற்றைம்பது சொற்கள் கற்றுக் கொடுத்துவிட்டால் அப்புறம் அவர்களே. படித்துக் கொள்வார்கள். இதை ஒராண்டில் செய்ய முடியாதா? ஒராண்டில் செய்தால் நான் இருந்து பார்த்து மகிழ்வேன். அய்ந்தாண்டில் செய்வதானால் யாரோ இருந்துதான் பார்க்க வேண்டும். 'துணைவேந்தர் ஐயா, நாளையே முதலமைச்சரோடு கலந்து பேசி, திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்த முதல்வருக்குத் துணை நிற்க வேண்டும்” என்று உலகறிய வேண்டுகோள் விடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/766&oldid=788602" இலிருந்து மீள்விக்கப்பட்டது