பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 நின்ைவு அலைகள் “ஏற்பாடு பெரியாருடையது. எனவே, அவரது விருப்பப்படியே நடக்கட்டும்” என்று பதில் உரைத்தேன். -- மீண்டும் ஒரு கருத்தைக் கேட்டார். “பல்கலைக் கழகத்தில் தங்களுக்குத் துணையாக இருப்பவர்கள் எவரையாவது அழைக்க வேண்டும் என்றால் அழைக்கலாம் என்று ஐயா சொல்லி, அனுப்பியிருக்கிறார்; தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார். “சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யும், தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கமும் எனக்கு உதவியாக நிற்கிறார்கள். அவர்களை அழைத்தால் நன்றாக இருக்கும்” என்றேன். -- "அப்படியே செய்யலாம்” என்று பதில் உரைத்தார் வீரமணி. என். மணிவிழா சிறப்பாக நடந்தது. பெரியாரே தலைமை ஏற்றார். அவ் விழாவில் குளிக்கரை பிச்சையப்பா என்னும் நாயனக் கலைஞர் நாதசுர இசை நிகழ்த்தி எல்லோரையும் மகிழ்வித்தார். அவர் அதற்காகப் பணம் ஏதும் பெற மறுத்துவிட்டார். தாமும் உடன் வந்தோரும் அவரவர்கள் செலவில் சென்னைக்கு வந்து வாசித்ததை இப்போது நினைத்தாலும் நன்றிப்பெருக்கு பொங்குகிறது. மேற்கூறிய பெரியவர்களோடு செட்டிநாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியாரும், அவருடைய திருமகனாரும் அப்போதைய சென்னை நகர வெடிரிபும் ஆன திரு. எம். ஏ. எம். இராமசாமியும் பங்கு கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியாரின் பாராட்டு பெரியார் அவ் விழாவில், “கர்மவீரர் காமராசர் கல்வி பற்றி நினைத்ததை எல்லாம் நெ.து. சு. உடனுக்குடன் செய்து காட்டினார். தமிழகத்தில் கல்வி வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதற்குக் காரணமாயிருந்தவர் நெ. து. சு.வே ஆவார்” என்ற போக்கில் என்னைப் பாராட்டி விரிவுரையாற்றினார். அதோடு நின்றாரா? இல்லை, தொடர்ந்து என்னிடம் வேலை வாங்குவதற்கும் கருத்துகள் வழங்கினார். o * -- "ஐயா நெ. து. சு. போன்றவர்கள் கல்விக்குப் பொறுப் 'பாயிருந்தும் நம் மக்களில் நூற்றுக்கு அறுபதுபேர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாக இருக்கலாமா? இது எனக்கு அல்லவா வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்நிலையை மாற்ற மெய்யாகவே வழி இல்லையா?” என்று குமுறியதோடு, “முதலமைச்சரும், கல்வி அமைச்சரும், துணைவேந்தரும் இதைப் பற்றிச் சற்றுக் கவலையோடு சிந்திக்க வேண்டும்; எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/765&oldid=788601" இலிருந்து மீள்விக்கப்பட்டது