பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மணிவிழாவைப் பெரியார் நடத்தி வைத்தார் - 745 + தலைமையில் என் மணிவிழாவைக் கொண்டாட பெரியாரே ஏற்பாடு செய்தார். அப்படிக் கொண்டாட என் இசைவைக் கேட்டு ‘விடுதலை ஆசிரியர் வீரமணியை என்னிடம் அனுப்பினார். அவர் என்னைக் கண்டு, செய்தியைச் சொன்னார். “என் மணவிழாவைக்கூட அடக்கமாக நடத்திக் கொண்டேன். அப்படியிருக்க-மணிவிழாவிற்குத் தடபுடலான கொண்டாட்டம் தேவையா?” என்ற கேள்வியை எழுப்பினேன். -- “பெரியார் இக் கேள்வியை எதிர்பார்த்துப் பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்; 'திருமணத்தின்போது தாங்கள் துணிந்து கலப்பு மனம் செய்து கொள்கிறீர்கள் என்று மட்டுமே சொல்வதற்கு இருந்தது.மணிவிழா தங்களுடைய முப்பதாண்டைய ஈடு இணையற்ற, கல்வித் தொண்டினை உலகறியச் செய்வதற்கு ஒரு வாய்ப்பாகும்’ என்று ஐயா சொல்லி அனுப்பியிருக்கிறார். தயவுசெய்து, இசைவு தாருங்கள்” என்றார் வீரமணி. "ஐயா மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை. அவர் விருப்பப்படியே மணிவிழா கொண்டாடட்டும். எவ்வளவு சிக்கனமாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிக்கனமாகச் செய்யட்டும்” என்று பதில் உரைத்தேன். எவரை அழைப்பது? “மணிவிழாவுக்கு எவர் எவரை அழைக்கலாம் என்பது பற்றியும் பெரியார் சில குறிப்புகள் காட்டியுள்ளார். அவற்றைத் தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். . “விழாவில் பங்கு கொள்ளும்படி கலைஞர், நாவலர், ராஜாராம் போன்ற ஆளுங்கட்சியினரை அழைக்கப் பெரியார் எண்ணியுள்ளார். ‘தங்களுக்குப் பெருந்தலைவர் காமராசர், இந்திய அரசு அமைச்சர் சி.சுப்பிரமணியம், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த எம். கல்யாணசுந்தரம் ஆகியோர் மிகவும் வேண்டியவர்கள். அவர்களையும் அழைக்க வேண்டும் என்று துணைவேந்தர் விரும்பினால் அதில் தவறு ஏதுமில்லை. எனக்கு எழுதச் சங்கடமும் இல்லை. அப்படி அவர்களை அழைத்தால், துணைவேந்தர் மணிவிழா அரசியல் கருத்தரங்காக மாறிவிடக்கூடும். எனினும், துணைவேந்தர் விருப்பப்படி ஏற்பாடு செய்வோம்; அவர் கருத்தைத் தெரிந்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார் பெரியார்” என்று வீரமணி கூறினார். ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/764&oldid=788600" இலிருந்து மீள்விக்கப்பட்டது