உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 நினைவு அலைகள் கழகத்தில் என் அறைக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனேன். அவர் சட்டென்று நாற்காலியில் அமர்ந்து அமைதியாகப் பேசினார். "நீங்கள் பல்கலைக் கழகத்தில் அருமையாகப் பணியாற்று கிறீர்கள். அதுபற்றி எல்லாப் பிரிவினருக்கும் மகிழ்ச்சி. உங்கள் முதிர்ந்த பட்டறிவுக்கு இன்னும் அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். உங்களை மாநில சட்டமன்ற மேலவைக்கு அனுப்புவதா, நாடாளுமன்ற மாநில அவைக்கு அனுப்புவதா, என்பது சிந்தனையில் இருக்கிறது. தங்கள் விருப்பம் என்ன? என்னிடம் தெரிவித்தால் நான் அரசிடம் தெரிவிப்பேன்’ என்று என்னிடம் கூறினார். அது வெறும் கயிறு திரித்தல் அல்ல; அவர் அத்தகைய முக்கியமான இடத்தில் ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தார். எதிர்பாராத இந்தக் கேள்வியைப் பற்றி நான் திகைக்கவில்லை. “அரசு எப்படிப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறதோ அப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று பதில் உரைத்தேன். அவருக்கும், அவர் வாயிலாக அரசுக்கும் நன்றி கூறினேன். பத்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமராசர் முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு, நீதிபதி அ. அளகிரிசாமி வாயிலாக என் மனைவி காந்தம்மாவைச் சென்னை சட்டமன்ற மேலவைக்காவது, நாடாளுமன்ற மாநில அவைக்காவது நியமிக்க வாய்வழி ஒப்புதல் கேட்டது என் நினைவுக்கு வந்தது. என் மனைவி இசையாமல் நழுவிக் கொண்டதையும் நினைவு கூர்ந்தேன். 84. என் மணிவிழாவைப் பெரியார் நடத்தி வைத்தார் பெரியார் ஏற்பாடு 12. 10. 1972இல் நான் அறுபத்தோராவது அகவையில் அடி எடுத்து வைத்தேன். மணிவிழாவைப் பிள்ளைகள் கொண்டாடு வார்கள். பிள்ளை இல்லாத எனது மணிவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எவர் கொண்டாடினார்? தந்தை பெரியார் கொண்டாடினார். மணிவிழா அன்று மாலை, சென்னை எழும்பூர் பெரியார் திடலில் பெரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/763&oldid=788599" இலிருந்து மீள்விக்கப்பட்டது