பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 - நினைவு அலைகள் தமது காதலரும் குருவும்ான ராஜாஜிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவருக்கு மரியாதை பெரியார் மயானத்திற்கும் இறுதி அஞ்சலி செலுத்த வந்தார். அங்கே காத்துக்கொண்டிருக்கும்போது, குடியரசுத் தலைவர் திரு. வி. வி. கிரி அங்குவந்து சேர்ந்தார். அவர் வருவதைக் கண்ட பெரியார், தாம் அமர்ந்திருந்த சக்கர வண்டியிலிருந்து, உடன் வந்தவரின் உதவியோடு, எழுந்து கீழே அமர்ந்துவிட்டார். தமது சக்கர நாற்காலியில் அமரும்படி மேதகு கிரி அவர்களை வேண்டிக் கொண்டார். இது எல்லோருடைய நெஞ்சையும் நெகிழ்வித்தது. ராஜாஜிக்கு இறுதி வணக்கம் மூதறிஞர் ராஜாஜிக்கு, ராஜாஜி மண்டபத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நான் துணைவேந்தராக மாலை அணிவித்து இறுதி வணக்கம் செலுத்த நேரிட்டது. 86. பெரியார் - மணியம்மையார் மறைவு பெரியார் வீட்டிற்கு வந்து வாழ்த்தினார் இதை நினைத்தால் நெஞ்சு வெடிக்கும்போல் இருக்கிறது. ஒராண்டில் தந்தை பெரியார் இயற்கை எய்துவார் என்று அப்போது கனவுக் கூடக் காணவில்லை. 1973 ஆம் ஆண்டு அக்டோபர் பன்னிரண்டாம் நாள், காலை 8.30 மணி போல் தந்தை பெரியார் என் இல்லத்திற்கு வந்துவிட்டார். அவரது வேன் வருவதைக் கண்டதும் நான் விரைந்தோடிச் சென்று அவரை வரவேற்றேன். பெரியார் கீழே இறங்கியதும், "ஐயா, சென்ற ஆண்டுபோல் இவ் வாண்டும் நாங்கள் இருவரும் தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றிருப்போமே! தாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு வரவேண்டுமா?’ என்று பெரியாரைக் கேட்டேன். அவர் நடந்தபடியே, “எனக்கு வேண்டியவர்களைப் பிறந்த நாளில் காண்பதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு ஒப்பிடும்போது இங்கு வந்தது ஒரு தொல்லையல்ல” என்று கூறிக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/771&oldid=788608" இலிருந்து மீள்விக்கப்பட்டது