உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் - மணியம்மையார் மறைவு 753 இல்லத்திற்குள் வந்து அமர்ந்தார். ஏற்கெனவே பெரியாருக்காக வாங்கி வைத்திருந்த பெரிய ரோஜாப்பூ மாலையை அணிவித்து மகிழ்ந்தேன். பெரியாரோடு வந்த புகைப்படக்காரர், சில படங்களை எடுத்தார். பெரியார் நடுவில் வீற்றிருக்க இரு பக்கங்களிலும் நானும், காந்தம்மாவும் அமர்ந்திருக்க எடுத்த படம் அவற்றில் ஒன்று. வானதி திருநாவுக்கரசுடன் படம் பெரியார் என் இல்லம் வந்தபோதுவானதி திருநாவுக்கரசு என்னை வாழ்த்த அங்கு வந்திருந்தார். அவர் நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார். அவரைப் பெரியாருக்கு அறிமுகப்படுத்தினேன். அடுத்த நொடி அவரைத் தம் பக்கத்தில் அமரும்படி பெரியார் கூறினார். திருநாவுக்கரசு கூச்சப்பட்டார். #. "கூச்சப்பட என்ன இருக்கிறது? நீங்கள் உங்கள் நம்பிக்கைக்கு உண்மையாய் இருக்கிறீர்கள் நான் என் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கிறேன்” என்று பெரியார் கூறினார். பெரியாருக்கு ஒரு பக்கத்தில் திருநாவுக்கரசும், மறுபக்கத்தில் நானும் இருக்கும் படமும் எடுக்கப்பட்டது. சில மணித்துளிகளுக்குள், “காந்தம்மா, கொடுக்கப்போகிற பலகாரத்தைச் சீக்கிரம் கொடு. எப்படியும் இங்குச் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்து காலைச் சிற்றுண்டி அருந்தாமல் வந்துள்ளேன்” என்று பெரியார் கட்டளையிட்டார். காந்தம்மா அளித்த சிற்றுண்டியை அருந்தி மகிழ்ந்தார். அரைமணி நேரத்திற்கு மேல் எங்களுடன் அளவளாவி விட்டு விடைபெற்றுக் கொண்டார். மூன்று திங்களுக்குள் பெரியார் முடிவு எய்துவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை. வேலூர் கிறித்துவ மருத்துவ மனையில், நினைவற்ற நிலையில், 24, 12. 1973 அன்று காலை நானும் காந்தம்மாவும் பெரியாரைக் கண்டோம். எங்களோடு சென்னையில் வாழ்ந்து வந்த சேலம் கல்லூரி முதல்வராக விளங்கிய ராமசாமிக் கவுண்டரின் வாழ்க்கைத் துணைவியார் கனகம்மாளும் வேலூருக்கு வந்தார்! மருத்துவமனையில் பெரியார் படுத்திருந்த அறைக்குள் அடிக்கடி சென்று பார்ப்பதும், வெளியே தாழ்வாரத்தில் இருப்பதுமாக நாளைக் கழித்தோம். 24.12.1973 அன்று காலை பெரியார் மூச்சடங்கும்போது காந்தம்மாவும், நானும் உடனிருந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/772&oldid=788609" இலிருந்து மீள்விக்கப்பட்டது