உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 87. சோவியத் பயணத்தைக் கைவிட்டேன் சோவியத் பயணமும் நூல்களும் 1971இல் ஒரு முறையும், 1973இல் ஒரு முறையும் நான் இந்திய சோவியத் கலாசாரக் கழகத்தின் சார்பில் சோவியத் நாட்டில் ஒரு வார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். அப் பயணத்தை எனது அலுவல் பணியின் ஒரு பகுதியாகக் கருத இடமுண்டு வேறு துணை வேந்தர்களும் பேராசிரியர்களும் அப்படித்தான் வந்தார்கள். கடுமையான நெறிகளைப் பின்பற்றி வந்த நானோ இரண்டு முறையும் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றேன். அச் சுற்றுப் பயனங்களின் விளைவாக, முறையே "சத்திய கங்கை”யில் "நான் கண்ட சோவியத் ஒன்றியம்’ என்ற தொடர் கட்டுரைகளும், "தினமணி கதிரி'ல் சோவியத் மக்களோடு’ என்ற தலைப்பில், தொடர் கட்டுரைகளும் வெளிவந்தன. பின்னர் அவை நூல்களாக வெளியாயின. சோவியத் நாடு நேரு விருது 1977இல் எனக்கு, சோவியத் நாடு நேரு விருது கிடைத்தது. எனக்கு விருது எதற்காக வழங்கப்பட்டது? இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்க்க நான் ஆற்றி வரும் அரிய பணியைப் பாராட்டி வழங்கப்பட்டது. அப்போது முதல் தர விருதுக்குச் சோவியத் பயணம், பதக்கம், 10,000 ரூபாயும், இரண்டாவது விருதுக்குச் சோவியத் பயணம் பதக்கம், 5,000 ரூபாயும் அளிக்கப்படும். முன்னாள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டாக்டர் பி. வி. ராஜமன்னார் தலைமையிலான பிராந்தியக் குழு எனக்கு முதல் தர விருது வழங்க வேண்டுமென்று 1976ரிலேயே பரிந்துரைத்ததாம். அது பலிக்கவில்லை. அடுத்த ஆண்டும் அக் குழு என்னையே முதல்தர விருதுக்குப் பரிந்துரைத்ததாம். இரண்டாம் முறை. பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இரண்டாம் தர விருதாகக் குறைக்கப்பட்டது. அதற்குக் காரணமாயிருந்தது ஒரு தமிழரே என்று கேள்வி. அது மெய்யா, பொய்யா என்று நான் புலன் விசாரிக்கவில்லை. தாமரை இலைத் தண்ணிர்போல் வாழ முயற்சிக்கும் ஒருவனுக்கு ஏன் அந்த விசாரம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/776&oldid=788613" இலிருந்து மீள்விக்கப்பட்டது