பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 நினைவு அலைகள் அப்பேதே முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கண்டு பேசி அவர் உதவியை நாடினேன். தனியார் கல்லூரி ஒவ்வொன்றுக்கும் ஆண்டுதோறும் அய்யாயிரம் ரூபாய் செலவிடவும், அத் தொகை முழுவதையும் அரசு நிதியிலிருந்து ஈடுபெறவும் ஆணை ஒன்று பிறப்பிக்க வேண்டினேன். வாய்வழி ஒப்புதல் பெற்ற பிறகு அரசிற்கு எழுத்தின் மூலம் பரிந்துரைத்தேன். அப் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது. பல கல்லூரிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டன. துடியலூர் தூதுக் குழு வந்தது இதற்கிடையில் கோவை துடியலூரிலிருந்து ஒரு தூதுக் குழு என்னை வந்து கண்டது. அக் குழுவின் வேண்டுகோள் என்ன? 1973 ஆம் ஆண்டு சூன் திங்களில் துடியலுாரில் புதிய தனியார் கலைக்கல்லூரி ஒன்று தொடங்கச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவு கோரினார்கள். என்னைப் பார்க்க வருவதற்கு முன், அக் குழுவினர் பெருந்தலைவர் காமராசரைக் கண்டு பேசி விட்டு வந்ததாக என்னிடம் தெரிவித்தார்கள். அக் குழு, கல்லூரியை நடத்தக்கூடிய தகுதி பெற்றதா என்பதை, பெருந்தலைவர். துல்லியம்ாகச் சொல்லக் கூடியவர், என்று என்னிடம் அவருடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். i “வழக்கமான கலை அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கி, வேலையில்லாத பட்டதாரிகளைப் பெருக்குவதில் பயன் இல்லை. ஆனால், மாற்றுத் திட்டம் என்ன என்பதும் மெல்ல மெல்லத்தான், விளங்க வேண்டும். புதிய யோசனை : சோதனைக் கல்லூரி பகுதி நேரப் பணிப் பயிற்சிக் கல்லூரி “உங்கள் பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்தது. அங்கே ஒரு ஆய்வு நடத்திப் பார்த்தால் என்ன? புதிதாகத் தொடங்கப்போகும் உங்கள் கல்லூரி ஒரளவு மாறுபட்டு இயங்கட்டும். அக் கல்லூரியில், பிற கல்லூரிகளில் நடக்கும் அதே பாடத் திட்டத்தை நடத்துவோம். கூடுதலாக வாரத்திற்கு இரண்டு நாள், நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் தொழிற்கூட சூழலில் உங்கள் மாணாக்கர் பணிப் பயிற்சி பெறட்டும். அதற்கு வசதியாக் இருக்கும் பொருட்டு, கல்லூரியைக் காலை எட்டு மணிக்கே தொடங்கிப் பிற்பகல் ஒன்றரை மணிக்கு முடித்துவிடுங்கள் இடையில், அரைமணி நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/781&oldid=788619" இலிருந்து மீள்விக்கப்பட்டது