பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிலும்போதே வேலைவாய்ப்பு 763 உணவுக்கு இடைவேளை தாருங்கள். பிற்பகல் மூன்று மணிக்கோ அல்லது நான்கு மணிக்கோ தொழிற்சாலையின் வசதிப்படி உங்கள் மாணாக்கர் ஒன்றரை மணிநேரம் பணிப் பயிற்சி பெறட்டும். "நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. அக்கம் பக்கத்திலுள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு நாள், மொத்தத்தில் மூன்று. மணி நேரம் தொழிற்சாலையில் ஏதாவது வேலை கற்றுத்தர இயலுமானால் மொத்தம் எத்தனை பேருக்குக் கொடுக்க முடியும் என்று கேட்டுப் பாருங்கள். எவரையும் கட்டாயப் படுத்தாதீர்கள். தாமே மனமுவந்து உதவ முன் வருபவர்களைக் கொண்டே இம் முயற்சியில் ஈடுபடுவது பொருத்த மாகும். அப்படி "சர்வே செய்து எத்தனை பேருக்குப் பகுதி நேரப் பணிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டு வாருங்கள், பிறகு, நாம் இதுபற்றி மீண்டும் பேசுவோம். “முதல் விளம்பரத்திலேயே, இது சோதனைக் கல்லூரி. இதன் வேலை நேரம் மற்ற கல்லூரியிலிருந்து மாறுபடும். இதில் சேர்வோர், கட்டாயம் பகுதிநேர பணிப் பயிற்சி பெறவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பணிப் பயிற்சி பெற்றவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்து விடுவோம்” என்று சிறிது மாற்றத்தோடு ஒரு திட்டத்தை அவர்களிடம் வைத்தேன். அவர்கள் ஒரு திங்களில் திரும்பி வந்து தகவல் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு எனது திட்டம் வியப்பைத் தந்தது. எனவே, மீண்டும் பெருந்தலைவர் காமராசரைக் கண்டு நடந்ததைக் கூறினார்கள். * காமராசரின் கருத்து அப் பெரியவர், நெ. து. சு. அளந்து ஆழம் பார்த்துக் கால் எடுத்து வைப்பவர். பொது மக்களுக்கு எது நன்மையானது என்பதைத் தவிர, வேறு சிந்தனை அறியாதவர். ஆகவே, அவர் பேச்சைக் கேட்டு, அதன்படியே செயல்படுங்கள்” என்று அவர்களுக்கு வழிகாட்டி அனுப்பினார். எழுச்சி மிக்க குழு அக் குழு மீண்டும் என்னைக் கண்டது. பெருந்தலைவரின் திசை காட்டலை என்னிடம் தெரிவித்தது. கல்லூரிக் குழுவின் தலைவர் ஒரு முதுகலைப் பட்டதாரி. அவர் பெயர் திரு. குமாரசாமி என்று நினைவு. துணைத்தலைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/782&oldid=788620" இலிருந்து மீள்விக்கப்பட்டது