உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

755 89. எல்லார்க்கும் பணிப் பயிற்சி 1973 ஆம் ஆண்டு இக் கல்லூரி தொடங்கப்பட்டது. திட்ட மிட்டபடி நடத்தப்பட்டது. இருநூற்று முப்பத்தொரு மாணவர்கள் அக் கல்லூரியில் சேர்ந்தனர். அக் கல்லூரி ஏற்பாடு செய்த பணிப் பயிற்சி'யை அனைவரும் ஒழுங்காக மேற்கொண்டனர். மானவர்களைப் பணிப் பயிற்சி நேரத்தில் தொழிற்சாலை களில் நான் நேரில் பார்க்க முடிந்தது. அனைவருமே ஆர்வத்தோடும், கட்டுப்பாடுடனும் சீரிய முறையில் பயிற்சி பெற்றனர். எவரும் பின்வாங்கவில்லை. 1973-74ஆம் ஆண்டும் 1974-75ஆம் ஆண்டும் எல்லா மாணவர்களும் மேற்படி பயிற்சியைப் பெற்று வளர்ந்தார்கள். - பனிப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவ் வேளைகளில் ஒரு இனிப்பு, ஒரு காரம், ஒரு பானம் இவற்றை அளிக்க வழி செய்தார்கள். ஆண்டின் இறுதியில், நூறு ரூபாய் விலை மதிக்கத்தக்க நல்ல கைப்பெட்டி ஒன்று பணிப் பயிற்சிக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது. இளங்கலைப் பட்டப் படிப்பிலும் தொடர்ந்தது இதற்கிடையில், இரண்டாம் ஆண்டில் இளங்கலைப் பட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கும் மேற்படி பணிப் பயிற்சி அளிக்கப்பட்டது. பி. எஸ். ஜி. கல்லூரியும் பணிப் பயிற்சிப் படிப்பு தொடங்கியது மேற்படி முயற்சி வெற்றி பெற்றதைக் கண்ட கோவை பிளைமேடு பி. எஸ். ஜி அறக்கட்டளை தனது கலைக் கல்லூரி வளாகத்தில், பணிப் பயிற்சிக்காகப் பெரியதொரு தொழிற் கூடத்தை அமைத்தது. துடியலூர் கல்லூரியும் பணிப் பயிற்சி ஏற்பாடுகளை மீண்டும் செய்து வைத்திருந்தது. கைவிடப்பட்டது அந்நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியில் மாற்றம் ஏற்பட்டது. டாக்டர் மால்கம் ஆதிசேசய்யா புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அவர், 'கல்லூரிச் கல்வியில் வேலைப் பயிற்சிக்கு இடமில்லை’ என்று கூறியதாகக் செய்தி யொன்று அப்போது வெளியானது. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/784&oldid=788622" இலிருந்து மீள்விக்கப்பட்டது