பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 நினைவு அலைகள் - என்னிடம் ஆலோசனை கேட்டனர் அதைக் கண்ட துடியலூர் கொங்கு நாடு கல்ைக் கல்லூரிச் செயற்குழுவினர் சென்னைக்கு விரைந்து வந்தனர். துணை வேந்தரைப் பார்ப்பதற்குமுன் என்னைக் கண்டு பேசினர். “பொதுக் கல்வியோடு பணிப் பயிற்சியை இணைக்கும் முயற்சி, எங்கள் கல்லூரியிலும் எங்கள் வட்டாரத்திலும் நன்றாக வேர் ஊன்றிவிட்டது. இதை மாணவர்களும் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இந்நிலையில், இதைக் கைவிட்டால் பொதுமக்களிடம் எங்களைப் பற்றி அவநம்பிக்கை ஏற்படும். என்ன செய்யட்டும்?” என்று என் யோசனையைக் கேட்டார்கள். “புதிய துணைவேந்தரைப் பேட்டி காணுங்கள். இரண்டாண்டுகளாக நடந்து வந்த வெள்ளோட்ட முயற்சிகளைப் பற்றி விவரமாக எடுத்துக் கூறுங்கள். அடுத்த ஆண்டிற்குச் செய்து இருக்கிற ஏற்பாடுகளை விளக்கிக் கூறுங்கள். பணிப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த இசைவு கேளுங்கள். அவர் இசைந்தால் நல்லது: இல்லாவிடில் விவகாரம் பண்ணிக் கொள்ளாதீர்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பினேன். அவர்கள் அப்படியே செய்தார்கள். புதிய முயற்சியினைத் துணைவேந்தர் ஆதரிக்கவில்லையாம். எனவே, அது கைவிடப்பட்டது. 90. நாள்தோறும் பொது மக்களைச் சந்தித்தேன் சின்னஞ்சிறு உதவிப் பஞ்சாயத்து அலுவலராக இருந்தபோது சாதாரண மக்களுக்கு எளிதாகப் பேட்டி கொடுத்தது போலவே மாவட்டக் கல்வி அலுவலர் ஆன பிறகும் காட்சிக்கு எளியவனாய் இருந்தேன். பொதுக்கல்வி இயக்குநராக உயர்ந்த பிறகும், அந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. என்னை அப் பெரும் பதவிக்கு நியமித்த முதலமைச்சர் காமராசர் அறிவுரை கூறியது போல எல்லோருக்கும் பேட்டி கொடுத்தேன். எல்லோர் சொற்களையும் செவி மடுத்தேன். சென்னைப் பல்கலைக் கழ்கத் துணை வேந்தரான பிறகும் அப்போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை. என் பெயருக்கு வந்த கடிதங்களனைத்தையும் நானே படித்தது போல என்னைப் பேட்டி காண வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/785&oldid=788623" இலிருந்து மீள்விக்கப்பட்டது