பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்தோறும் பொது மக்களைச் சந்தித்தேன் . - 767 அனைவருக்குமே பேட்டி கொடுத்தேன். என்வே, அடிப்படை ஊழியர் முதல் மிகப்பெரிய அலுவலர்வரை என்னிடம் நேரில் பேசலாம் என்ற முறையைப் பின்பற்றினேன். _ _ பொதுமக்கள் என்னை நாடி வந்தால் என்ன கோரிக்கையைக் கொண்டு வருவார்கள்? தங்கள் பிள்ளைக்கு மேல் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கும்படி கோருவார்கள். குறிப்பாகப் பல்கலைக் கழகம் இணைப்புப் பாலமாக செயல்பட்ட மேல் பட்டப் படிப்பிற்கு இடம் கேட்டு வருவார்கள். முதலாண்டே அத்தகைய கோரிக்கைகள் நூற்றுக்கணக்கில் வந்தன. ஒன்று விடாமல் அத்தனை வேண்டுகோள்களையும் ஒரு கைப் புத்தகத்தில் தொகுத்து எழுதி வைத்துக் கொள்வேன். தேர்வுக் குழு கூடுவதற்கு முன்னால் குறிப்பிட்ட பாடம் கோரும் பட்டியலை ஒருமுறை பார்த்துக் கொள்வேன். அந்தப் பாடம் கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை ஒன்றுவிடாமல் படிப்பேன். அப்படிப் படிக்கும்போது தந்தையின் தொழில், குடும்பச் சூழல் போன்றவற்றை விழிப்பாகக் கவனிப்பேன். அப்படிச் செய்தது எனக்குப் பெருந்தொல்லையாகவே இருந்தது. இருப்பினும், அதைக் கைவிடவில்லை, ஏன்? . "பரிந்துரை வெள்ளம் திக்கு முக்காட வைத்தது” முதலாண்டில் வந்த பரிந்துரைகளில் 50க்கும் மேற்பட்டவை மேலிடத்துப் பரிந்துரைகளாகும். பெரியவர்கள் பரிந்துரை செய்து இருக்கிறார்களே என்று அதிக மதிப்பெண் பெற்றவரை விட்டு விட்டு, கீழ் வரிசையில் உள்ளவரைச் சேர்த்துவிட முயன்றிருந்தால், நான் வழக்கு மன்றத்தில் பதில் சொல்ல நேர்ந்திருக்கும். மதிப்பெண் வரிசைப்படிதான் சேர்ப்பது என்ற நெறியிலிருந்து ஒரு போதும் பிறழவில்லை. அதே நேரத்தில், பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாத ஆணவக்காரன் என்று எவரும் உளமாரக் குற்றஞ்சாட்டமுடியாதபடி செயல்பட என்னால் முடிந்தது.

ஏழைகளுக்கு இடம் எடுத்துக்காட்டுக்கு ஒன்று : ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஐம்பது விழுக்காட்டிற்குக் குறைவானவர்களுக்கும் இடம் கொடுக்கலாம்’ என்ற நிலை உருவாகும்போது பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும் கவனிப்பேன். அவ் விண்ணப் யதார்ர்களின் சூழ்நிலை பற்றியும் அறிந்து வைத்திருந்ததால் பரிங் காையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/786&oldid=788624" இலிருந்து மீள்விக்கப்பட்டது