உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 GB நினைவு அலைகள் இல்லாத ஏராளமான ஏழைமாணவர்களுக்கும் இடம் கொடுக்க முடிந்தது. o எரிச்சல் கொண்டனர் -- முதலாண்டில் ஒரு பெரிய இடத்திலிருந்து வந்த 35 பரிந்துரைகளில் 25க்கு இடம் கண்டுபிடித்து உதவ முடிந்தது. ஆனால், இடம் பெற்றவர், பரிந்துரை செய்தவரிடம் சென்று தெரிவிப்பதே இல்லை. ஆனால், இடம்பெறாத அந்தப் பத்துப் பேர் பரிந்துரை செய்தவரிடம் நாள்தோறும் சென்று இடம் கேட்டு நிற்பர். பெரியவர்கள் பல்கலைக்கழகத்தின்மேல் எரிச்சல் கொள்வர். துணைவேந்தர்கள் எவ்வளவுதான் நேசக்கரம் நீட்டினாலும், அது விளையாத பயிராகப் போவதற்குக் காரணங்களில் ஒன்று, மேற்படி எரிச்சல் ஊட்டுதல் ஆகும். வேதனைக்கு வித்து ஆண்டுக்கு ஆண்டு கோரிக்கைகள் பெருகியதுபோல, பரிந்துரைகளும் அதிகரித்தன. என்னுடைய ஆறாவது ஆண்டு துணைவேந்தர் பணியில் ஒரு பெரிய இடத்திலிருந்து 135 பரிந்துரைகளும், அடுத்த நிலையிலுள்ளவரிடமிருந்து 150 பரிந்துரைகளும் வந்தன. அவற்றில் முறையே 130, 112 தகுதி பெற்றிருந்த மாணவர்களுக்கு இடம்பிடித்துக் கொடுக்க முடிந்தது. சாதாரண காலங்களில் இது பூரிப்பூட்டும் சாதனையாகும். ஆனால், அச்சாதனை வேதனைக்கு வித்தாயிற்று. எப்படி? பல்கலைக் கழகமே நேரடியாக நடத்திவந்த மேல்பட்டப் படிப்பு வகுப்புகள் சில. அவற்றில் ஒன்றுக்கு 25 பேர்களை மட்டுமே சேர்க்கும்படி அனைத்திந்திய வல்லுநர் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று நடைமுறைப் படுத்துவது பல்கலைக் கழகத்தின் தார்மீகப் பொறுப்பாகும். ** அந்த 25 இடங்களில் பன்னிரண்டு இடங்கள் ஷெடியுல்டு பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய இரு பிரிவினருக்குச் சேர்த்து ஒதுக்க வேண்டும். திறந்த போட்டியில் 13 பேர்களைச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கும்போது, பல்வகையான தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிர்வாகத் துறைகள், பொதுத்துறை அமைப்புகள் ஆகியவற்றிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது மேற்படி வல்லுநர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும். ஒரு அமைப்புக்கு ஒரு இடம்’ என்கிற நடைமுறைக் கொள்கையை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் கடைப்பிடித்தார். அதையே நானும் பின்பற்றினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/787&oldid=788625" இலிருந்து மீள்விக்கப்பட்டது