பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்தோறும் பொது மக்களைச் சந்தித்தேன் 7E9 உள்ள இடங்களோ 25 ஒரே அமைப்பிற்குப் பரிந்துரை 12 ஆனால், அவ்வாண்டு அப் பிரிவுக்காக ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர்களை மேலிடப் பெரியவரும் அதே அமைப்பைச் சேர்ந்த வேறு ஆறு பேர்களை அடுத்த நிலைப் பெரியவரும் பரிந்துரைத்தார்கள். இடங்களோ 13. இருவரின் பரிந்துரைகளோ 12. எப்படி சமாளிப்பது? முந்திய ஆண்டுகளில் அந்த அமைப்பு முழுவதற்குமாக ஒர் இடம்தான் கொடுப்பது. வழக்கம். நான் துணிந்து இரு பரிந்துரைப் பட்டியல்களில் இருந்த ஒவ்வொரு வரைத் தேர்ந்தெடுக்கக் குறிப்புக் காட்டினேன். யார் தகுதியுடையார் என்று நான் எப்போதும் குறிப்புக் காட்டியதில்லை. தேர்வுக்குழு கூடி, மேற்படி 12 பேரையும் நேர்முகப்பேட்டி கண்டு அவ் வமைப்பின் இருவர் பெயர்களைப் பரிந்துரைத்தது. அவர்களுக்கு இடம் கிடைத்தது. மேற்படி நிகழ்ச்சி ஒரு பூகம்பத்தையே எழுப்பிற்று. மேற்படி அமைப்பு தமிழக அரசியலில் சிலருக்குத் தேர்தல் கால உதவிகளைச் செய்து வந்தது. அதைச் சுட்டிக்காட்டி என்னிடம் எனக்கு வேண்டியவர்கள் வாதாடினார்கள். நான் என்ன செய்ய? நானும் நெறிமுறைகளுக்குக் கட்டுப் பட்டவன். ஏழை மாணவர்களுக்கும் உதவி செய்யவே வாழ்ந்து வருபவன். - நானாகவே இடம் கொடுத்தேன் குடிசை வாழ் இளைஞன் ஒருவன். அவன் பகலில் தச்சுத் தொழில் செய்து கூலி பெற்று வாழ்ந்து வந்தான். அதே நேரத்தில் , கல்வியின்பால் கொண்ட ஆர்வத்தால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் முறையிலேயே வெற்றி பெற்று விட்டான். அதற்குப் பிறகு மேல் பட்ட விஞ்ஞானப் படிப்புக்கு விண்ணப் பித்தான். அவனுக்குப் பரிந்துரை செய்ய எவரும் இல்லை. சென்னையைச் சேர்ந்த பையன் பல்கலைக் கழகத்துக்கு வந்து கேட்கவும் கூடத் தெரியாத அப்பாவியாக இருந்தான். அவனுடைய விண்ணப்பத் தாளில் கண்டிருந்த தகவலைக் கொண்டு, நானாக அவனுக்கு இடம் கொடுத்தேன். அவன் நல்லபடி படித்துத் தேர்ச்சி பெற்றான். பின்னர், பி. எச். டி. பட்டத்திற்கு ஆய்வு நடத்தி வெற்றி பெற்றான். இன்று பெரும் பணியில் இருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/788&oldid=788626" இலிருந்து மீள்விக்கப்பட்டது