பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 நினைவு அலைகள் பரிந்துரைகளை மட்டுமே கவனித்துச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்க முயன்றிருந்தால், இத்தகைய உதவியைக் குடிசை வாழ்வோருக்குச் செய்திருக்க முடியுமா? * புதிதாகக் கண்டுபிடித்த புழுவுக்கு என் பெயர் சூட்டப் பட்டது பல்லாண்டுகளாகப் பணியாற்றும் அமைப்புகளுக்கென்று சில மரபுகள் வந்து விடுகின்றன. சில மரபுகள் காலம் கடந்தும் பின்பற்றப்படுவதால் வளர்ச்சி குன்றிப் போவதும் உண்டு. அத்தகைய மரபொன்றை நான் மாற்ற நேரிட்டது.அம் மரபு என்ன? இந் நூற்றாண்டை மாநாடுகள் நூற்றாண்டு எனலாம். ஒவ்வொரு ஆண்டும், பன்னாட்டு மாநாடுகள் ஏதாவது ஒரு துறை பற்றி எங்கோ நடப்பதாகப் படிக்கிறோம். பன்னாட்டு மாநாடு களுக்குச் செல்வோர் ஒன்று வல்லுநர்களாக இருக்கவேண்டும். அல்லது வல்லுநர் மட்ட விவாதங்களைப் புரிந்து கொள்கிறவர் f - களாக இருக்க வேண்டும். மேற்படி அளவு கோல்களின்படி பார்த்தால் பன்னாட்டு மாநாடுகளுக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களை அனுப்பி வைப்பதே பொருத்தம். எனவே, அக் கொள்கையைச் சென்னைப் பல்கலைக் கழகம் பின்பற்றி வந்தது. அதில் எவரும் குறை காண்பதற்கு இல்லை. மரபை மாற்றினேன் *H காலம் மாறுகிறது. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறக்கிறது.' இளைஞர்களில் சிலர் உலக வல்லுநர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்குத் திறமையோடு பணி புரிகிறவர்கள் பெருகி வருகின்றனர். அத்தகைய இளைஞர்களில் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழக ‘விலங்கியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் பணி நேரத்தைப் பணிக்காகவே செலவிட்டார். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை உலகப் புகழ்பெற்ற இதழ்களில் இடம் பெற்றன. அது உலக விலங்கியல் மாநாட்டின் கவனத்தை ஈர்த்தது. எனவே, ஒராண்டு உரோமாபுரியில் நடந்த 'உலக விலங்கியல் மாநாட்டிற்கு நம் பல்கலைக் கழக விரிவுரையாளர் அழைக்கப்பட்டார். அவர் மாநாட்டிற்கு வந்து போகும் முழுச் செலவையும் மாநாட்டுக் குழுவே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பும் உடன் வந்தது. நம் பல்கலைக் கழகத்தின் கோடை விடுமுறையின் போதுதான் மேற்படி மாநாடு நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/789&oldid=788627" இலிருந்து மீள்விக்கப்பட்டது