பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்தோறும் பொது மக்களைச் சந்தித்தேன் 771 அலுவலகக் குறிப்பு சொன்னதென்ன? மேற்படி அழைப்பினைப் பற்றி அலுவலகக் குறிப்பு என்ன சொல்லிற்று? விரிவுரையாளர் நிலையிலுள்ள எவரையும் எந்த உ .ெ தி மாநாட்டுக்கும் அனுப்புவதில்லை என்பதே சென்னைப் பல்கலைக் கழகத்தின் மரபு. அதை மீறி இவ் விரிவுரையாளரை அனுப்பினால் அதைக் காட்டி மற்ற விரிவுரையாளர்களும் கேட்கக் கூடும். எனவே, விரிவுரையாளருக்கு அனுமதி மறுத்துவிடலாம். இப்படி இருந்தது அலுவலகக் குறிப்பு. இந்திய அலுவலகங்களில் பரவி. வரும் நோய் நாட்டின் நிலை என்ன? இளநிலை எழுத்தர் ஒருவர் ஏதாவது எழுதினால் அதை மறுத்து எழுத எவருக்கும் துணிவு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி விட்டோம். பொறுப்பிலுள்ளவர்கள் ஆக்கப் பணிகளுக்குச் செலவிடும் நேரத்தை விட - சிந்தனையை விட - தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அதிக நேரத்தை சிந்தனையை - செலவிட வேண்டிய அவல நிலையை உருவாக்கி விட்டோம். எப்போதோ நடந்ததைப் பற்றிப் பின்னர் எப்போதோ விசாரணை நடக்கலாம் என்கிற மிரட்டல் சூழல், அலுவலகங் களிலும் பொது வாழ்விலும் காளான்கள்போல் முளைத்துவிட்ட நிலையில், எவரும் பொறுப்பேற்க முன் வருவதில்லை. ஒவ்வொரு வரும் ஒரு கொக்கி போட்டு அடுத்தவருக்குக் கோப்பை அனுப்பி விடுவதே வழக்கமாகி விட்டது. நான் அந்தப் போக்கை என்றுமே கடைப் பிடித்ததில்லை. எனவே, மரபுக்கு மாறான முடிவை துணிந்து எடுத்தேன். உலக மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட விரிவுரையாளரான அவரை கோடை விடுமுறையில் அனுப்புவதால் சென்னையில் அவரது பண்ணி எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதோடு சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு செல்வேதும் ஏற்படாது. உலக வல்லுநர்கள் அடையாளம் கண்ட பிறகாவது நாம் நம்முடைய ஆசிரியர்களை ஊக்கப்படுத்த முன்வர வேண்டாமா? எனவே விரிவுரையாளர் திரு. கோ. சுந்தர்ராஜுலுவை உரோம் நகரத்தில் நடக்கும் உலக விலங்கியல் மாநாட்டுக்கு அனுப்பலாம் என்று ஆணையிட்டேன். ஆட்சிக் குழுவின் முன் அது வைக்கப்பட்டது. குழுவும் ஒப்புதல் அளித்தது. = - - கோ. சுந்தர்ராஜூலு ரோமாபுரி சென்றார் மாநாட்டுக்கு இரண்டு நாள் இருக்கையில் திரு. சுந்தர்ராஜுலு உரோம் நகரம் போய்ச் சேர்ந்தார். பலமணி நேரங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/790&oldid=788629" இலிருந்து மீள்விக்கப்பட்டது