பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 - - நினைவு அலைகள் அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் செலவிட்டார். அக் கடலில் வாழும் உயிரினங்களைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தார். புதுமையான புழுக்கள் இரண்டு தென்பட்டன. அவற்றைப் பிடித்துக் கொண்டார். வாடிகன் அருங்காட்சியகத்துக்கு அவற்றைக் கொண்டு சென்றார். அதுவரை அத்தகைய புழுக்களைக் கண்டு பிடித்ததாக எவ்விதப் பதிவேடும் அங்கு இல்லை. எனவே, அவற்றிற்குப் பெயர் கொடுத்துப் பதிய, காட்சியகத்தார் முன் வந்தனர். இவர் தன் பெயரையோ பெற்றோர் பெயரையோ அற்றிற்கு இடவில்லை. பின் எவர் பெயரை இட்டார்? ஒரு புழுவுக்குப் பெரியார் ஈ. வெ. ராமசாமி என்றும், மற்றொன்றுக்கு நெ. து. சுந்தரவடிவேலு என்றும் பெயரிட்டுப் பதிய வைத்தார். நாள்கள் ஒடின. உலக விலங்கியல் மாநாடு முடிந்தது. திரு. சுந்ததர்ராஜூலு சென்னைக்குத் திரும்பினார். ஒருநாள் காலைப்பொழுது முன்னறிவிப்பின்றி என் வீட்டிற்கு வந்தார். காக்க வைக்காமல் பேட்டி கொடுத்தேன். அவர், "அய்யா, என்னை மன்னிக்கவேண்டும். நான் தங்களைக் கேட்காமலேயே, தங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொண்டேன். நெடுந்துரத்திலிருந்து தங்களோடு பேசி இசைவு பெற வசதியில்லை. எனவே, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.” என்று கூறினார். “எதற்காக என் பெயரைப் பயன்படுத்தினர்கள்?” என்று வினவினேன். நடந்ததை விவரமாகச் சொன்னார். "ஆலைத் தொழிலாளியின் பிள்ளைகளும் உயர்கல்வி கற்க எழுச்சியூட்டி, அவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்க, போராடியவர் பெரியார். எனவே, அவர் பெயரை ஒரு புழுவிற்குச் சூட்டினேன். தமிழ்நாட்டில் பகல் உணவுத் திட்டம் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். பகலுணவை உண்டவன். அத் திட்டத்தை இயக்கிய தங்களுக்கு நான் நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா? எனவே, தங்கள் பெயரை மற்றொரு புழுவிற்குச் சூட்டி விட்டேன். இப்படிப் பெயர் சூட்டாமலிருந்தால், அவற்றிற்கு என் பெயரைச் சூட்டியிருப்பார்கள். எனவே, நான் துணிந்து தங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். தயவுசெய்து மன்னியுங்கள்” என்று பணிவுடன் மீண்டும் வேண்டினார். பெயர்ப்பொருத்தம் “ஒரு புழுவோடு என் பெயரை இணைத்திருப்ப்தில் ஒரு - பொருத்தம் உள்ளது. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் என்னைப் பற்றி எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும். நானோ, ஆணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/791&oldid=788630" இலிருந்து மீள்விக்கப்பட்டது