உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெனின் - விஜயா திருமணம் - 773 இடும்போதுதான் அதிகாரத்தைச் செலுத்தும் பெருமிதத்தோடு சிந்திக்கிறேன். மற்ற நேரங்களில் மனித மாக் கடலில் வாழும் ஒரு சிறு புழுவாகவே என்னைக் கருதிக் கொண்டிருக்கிறேன். எவருக்கும் தீங்கு செய்யாத புழுவாக இதுவரை வாழ்ந்ததுபோல் இனியும் தீங்கு செய்யாது வாழ விரும்புகிறேன். இந் நிகழ்ச்சியின் பின்னணியாக வுள்ள தங்கள் நன்றியுணர்வு எனக்கு வரக்கூடிய பெருமையிலும் பெரிதாகும்” என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்தேன். 91. லெனின் - விஜயா திருமணம் லெனின் - விஜயா திருமணம்

  • முன்னரே சொல்லியிருக்க வேண்டிய நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. அது மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. எனது நேர் இளைய தம்பி, நெ. து. சிவானந்தத்தின் ஒரே மகனான சி. லெனினுக்கும் அம்பத்துார் என். சானகிராமன் அவர்களின் மூத்த மகள் சா. விசயலட்சுமிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. திருமண நாள் 3-7-1972 ஆகும். ா

சென்னை பெரியார் ஈ. வெ. ரா. நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கெளரி கல்யாண மண்டபத்தில், திருமணம் சிறப்பாக நடைபெற்றது. குடும்பத்தின் மூத்தமகன் என்ற முறையில் திருமண அழைப்பு என் பெயரிலும், எனது துணைவியார் காந்தம்மா பெயரிலும் அனுப்பப்பட்டது. நாங்கள் இருவரும் அப்போதைய ஆளுநர் மேதகு. கே. கே. வடிா அவர்களையும் திருமதி வடிா அவர்களையும் நேரில் அழைத்தோம். என்னே அவர்களின் பெருந்தன்மை திருமண நேரத்திற்கு வந்து, மேடையில் அமர்ந்து திருமணத்தை நடத்திக் கொடுத்தார்கள். இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், அவரது துணைவியார் திருமதி. தயாளு அம்மையாரையும் வேறு ட )ெ அமைச்சர்களையும் நேரில் அழைத்தோம். முதலமைச்சர் கலைஞரும் அவரது துணைவியாரும் திருமணத்துக்கு வந்து சிறப்பித்தார்கள். கலைஞர் வாழ்த்துரையும் கூறினார். அமைச்சர் மதியழகனும் அவரது துணைவியாரும் வருகை தந்து சிறப்பித்தனர். திரு. தி. இராசாராம், அமைச்சர்கள் ப.உ. சண்முகம், கே. மாதவன், சாதிக்பாட்ஷா, சர். பி. டி. இராசன், குன்றக்குடி அடிகளார், டி. கே. சண்முகம், டி. கே. பகவதி ஆகியோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/792&oldid=788631" இலிருந்து மீள்விக்கப்பட்டது