உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

775 92. பெரியார் என்னை உறுதியாக ஆதரித்தார் பெரியார் உறுதியாக ஆதரித்தார் திருமணம் என்றதும் மற்றொரு திருமண்ம் நினைவுக்கு வருகிறது. பெரிய இடத்துப் பிள்ளை ஒருவரின் திருமணத்தை சென்னைப் பல்கலைக் கழகக் கலையர்ங்கத்தில் நடத்த என் இசைவைக் கேட்டார்கள். அக் கலையரங்கம் கல்வி நிலையங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பது அது பற்றிய விதிகளில் ஒன்றாகும். எனவே, என்னால் அத் திருமணத்துக்கு இடம் கொடுக்க முடியவில்லை. அச்சிட்ட விதிமுறைகளைக் காட்டி எவ்வளவோ பணிவாக மறுப்புக் கூறிய போதிலும், சம்பந்தப்பட்ட பெரியவரின் மனம் புண்பட்டது. எனவே, தந்தை பெரியாருக்கு இதைப் பற்றித் தகவல் கொடுக்கப் பட்டது. தந்தை பெரியார் தலையிட்டாரா? என்னை நெருக் கினாரா? இல்லை. இல்லை. “பல்கலைக் கழகக் கலையரங்கத்தைத் திருமணத்துக்குக் கேட்டது சரியல்ல. நெ. து. சுவிடம் முறையில்லாத நடவடிக்கை எதையும் எதிர்பார்க்கக் கூடாது” என்று தக்க தூதுவர் வாயிலாகப் பெரியார் பதில் சொல்லி யனுப்பினார். சில நாள்கள் ஓடின. பெரியார் சென்னைக்கு வந்தார் அவரைக் காந்தம்மாவும் நானும் சென்று கண்டோம். பெரியாரே, திருமணத்திற்கு இடம் கொடுக்க மறுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். தான் சொல்லியனுப்பிய பதிலையும் கூறி னார். நான் செய்தது சரியே என்று நேரிலும் உறுதிப் படுத்தினார். சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்வரை எனக்கு ஒரு தீங்கும் நேரிடாது என்று தந்தை பெரியார் தெம்பூட்டினார். மீண்டும் அதே தொல்லை பெரியார் மறைந்த பிறகு, 1975இல் அதே பெரிய மனிதர் குடும்பத்தில், மற்றொரு பிள்ளைக்குத் திருமணம் உறுதி செய்யப் பட்டது. அக் குடும்பத்தின் சார்பில், பெரிய அலுவலர் ஒருவர், பல்கலைக் கழகக் கலையரங்கத்தில் அத் திருமணத்தை நடத்தப் பல்கலைக் கழகத்தின் ஒப்புதலைக் கேட்டார். எப்படிக் கொடுக்க முடியும்? விதிமுறைகள் மீண்டும் காட்டப்பட்டன. மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/794&oldid=788633" இலிருந்து மீள்விக்கப்பட்டது