பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 நினைவு அலைகள் பெரியவர் மனம் புண்பட்டது. அதற்கு மருந்தாகப் பயன் பட பெரியார் இல்லையே. எனவே, அப் புண் சற்று ஆழமாகவே தாக்கிற்று. பெரியாரிடம் என் மீது புகார் பெரியார் உயிரோடு இருந்தபோது, என்னைப் பற்றி மேலும் இரண்டொரு முறை புகார்கள் பெரியாரிடம் கொண்டு போகப் பட்டன. நான் துணைவேந்தரான சில நாள்களுக்குப் பிறகு, மாண்பமை நீதிபதி, ப. ச. கைலாசம் என்னோடு தொலைபேசியில் பேசினார். "ஜி. யூ. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகத்தை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. எனது வெளி நாட்டு நண்பர் ஒருவருக்குப் பரிசளிக்கும் பொருட்டு அந் நூலின் படியொன்றை விலைக்கு வாங்க முயன்றேன். விற்பனைக்குப் படிகள் இல்லை. ஆவணத்துக்கு மட்டும் ஆறு படிகள் கையிருப்பு உள்ளனவாம். என் நண்பர் இரண்டொரு நாள்களில் வெளிநாடு செல்லப் போகிறார். எனவே, எப்படியாவது எனக்கு ஒரு படி வேண்டும்.அப்படி எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். விதியைத் தளர்த்தினேன் உயர் நிலையிலுள்ள அந்த வெளிநாட்டு நண்பருக்கு அந் நூல் கிடைக்குமானால் அது சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெயரை நினைவு படுத்திக் கொண்டிருக்குமே என்று எனக்குத் தோன்றிற்று. எனவே, விதியைத் தளர்த்தினேன். ஆவணத்திற்காக அதில் மட்டும் ஐந்து படிகள் போதுமென்று முடிவு செய்தேன். நீதிபதி கைலாசம் தமிழின் பெருமையை வெளிநாட்டு நண்பர் மூலம் அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டார். மேற்படி நூலை உடனடியாக மறுபதிப்பு செய்ய ஆணை யிட்டேன். அலுவலகம் விதி முறைகளுக்கு உட்பட்டு, விரைந்து செயல்பட்டது. அப்படிச் செயல்படும்போது மற்றோர் வெளியீடும் முழுமையாக விற்றுப் போயிருந்தது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதையும் மீண்டும் பதிப்பிக்கலாமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அது எந்த நூல்? அது, திருவாய் மொழிக்கு திரு. புருசோத்தம நாயுடு எழுதிய விரிவுரையாகும். சைவம், வைணவம் என்கிற வேறுபாடு பாராமல், இரு நூல்களையும் மறு பதிப்புச் செய்ய ஆணையிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/795&oldid=788634" இலிருந்து மீள்விக்கப்பட்டது