உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் என்னை உறுதியாக ஆதரித்தார் 777


----------

இதைப் பற்றிய புகார் ஒன்று தந்தை பெரியார் காதுக்கு எட்டிற்று. அவர் என்மேல் எரிச்சல் கொள்ளவில்லை. அப் புகாரைப் பொருட்படுத்த வில்லை. பெரியாரின் சமூக நீதி உணர்வு மற்றொரு முறை ஒரு நியமனம் பற்றி என் பேரில் பெரியாரிடம் புகார் சொல்லப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தகவல் வழிகாட்டல் பிரிவின் தலைமை அலுவலராகத் திரு. சி. ஏ. தருமராசன் என்பவர் பதவி வகித்தார். அவருக்கு 55 வயது நெருங்கிற்று. அவரை 55 வயது முடிந்ததும் ஒய்வு கொடுத்து அனுப்ப வேண்டுமா அல்லது ஆசிரியர்களைப் போல் 60 வயது வரை வேலையில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கற்பிக்கும் பணி அவருக்கு இல்லை. எனினும், அவருக்கு அலுவலர்களுக்கான ஊதிய விழுக்காட்டில் சம்பளம் கொடுக்க வில்லை. அலுவலர் பணியாளர் ஆகியோருக்கு சம்பள மாற்றம் செய்த போது, அவருக்கு ஊதிய மாற்றம் செய்யவில்லை எக் காரணம் பற்றியோ ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பட்டதாரியான அவரை ஆசிரியர் பிரிவில் சேர்த்து அப்போது "ரீடருக்கான ஊதியம் வழங்கி வந்தார்கள். எனவே, அவர் 60 வயதுவரை இருக்கலாமா என்ற அய்யப்பாடு எழுந்தது. மேற்படி விவகாரத்தை ஆட்சிக் குழுவின் முன் வைத்தேன். பலரும் கருத்துத் தெரிவித்தனர். அத்தனை ஆண்டுகளாகச் சம்பள விழுக்காட்டிற்கு ஆசிரியர் பிரிவில் வைத்திருந்து விட்டு, ஒய்வுபெறும் வயதுக்கு மட்டும் அலுவலராகக் கருதுவது முறையல்ல. இதுவே, எல்லாருடைய ஒருமித்த கருத்தாக இருந்தது. எனக்கும் நியாயம் என்று பட்டது. எனவே, திரு. தருமராசன் அறுபது வயதுவரை பணியில் நீடிக்கலாம் என்று ஆட்சிக்குழு முடிவு செய்தது பெரிய அலுவலர் ஒருவர் இது பற்றிப் பெரியாரிடம் புகார் சொன்னார். “நெ. து. சு.வே. அய்யர்களுக்குத் துணை போனால் நன்றாகவா இருக்கும்?” என்று கூறிப் பெரியார் மனத்தைக் கலைக்க முயற்சி செய்தார். தந்தை பெரியார் “நெ. து. சு. நம்மவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் மற்றவர்களுக்கு அநீதி இழைக்க மாட்டார்” என்று அந்த அலுவலருக்கு, நேருக்கு நேர் பதில் சொல்லியனுப்பி Бёттгr.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/796&oldid=788635" இலிருந்து மீள்விக்கப்பட்டது