பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப் பாதுகாப்பதில் காமராசரின் ஆர்வம் 779 பதினைந்து நாள்கள் போல் நீண்ட பயணத்தை மேற்கொண்டு விட்டுத் திரும்பியதும், மற்றொரு பயணத்தை மேற்கொள்வதா? என்ற கேள்வி மின்னிற்று. திரு. வீரய்யா வாண்டையார்பால் நான் கொண்டிருந்த நன்மதிப்பினை வெளிப்படுத்தக் கிடைத்தற்கரிய அவ்வாய்ப்பினை நழுவவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். எனவே விழாவுக்குத் தலைமையேற்க இசைவு தந்துவிட்டு, மற்றும் எவர் எவர் கலந்து கொள்ளக்கூடும் என்று கேட்டேன். “முதலமைச்சர் டாக்டர் கலைஞரையும், கல்வி அமைச்சர் நாவலரையும் அழைப்பதாக வந்துள்ளோம். இருவருமே ஒப்புக் கொண்டால், எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் இசைவு தந்த பிறகு அவர்களுக்கு எதுவும் சங்கடம் இல்லையென்றால், பெருந்தலைவர் காமராசரையும் அழைக்க எண்ணியுள்ளோம்.” என்று பதில் கூறினார். "அப்படியே செய்யுங்கள்” என்று அவர்களுக்குத் தெம்பூட்டி அனுப்பினேன். அடுத்த நாள், கானாவுக்குப் புறப்பட்டேன். மாநாட்டில் கலந்து கொண்டு சென்னைக்குத் திரும்பினேன் விமான நிலையத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்னை வரவேற்றவர் களில் பூண்டி கல்லூரி முதல்வர் திரு. கோவிந்த சாமியும் இருந்தார். அவர் அணிவித்த பெரிய மலர் மாலையை ஏற்றுக் கொண்ட நொடியில், “கல்லூரியில் பெரிய நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு இவ்வளவு நிம்மதியாகச் சென்னைக்கு வர எப்படி உங்களால் முடிந்தது? அந்த விழா குறிப்பிட்ட தேதியில் நடக்கிறதல்லவா?” என்று நான் அவரைக் கேட்டேன். வந்திருந்தவர்களோடு நான் கைகுலுக்கிய பின்னர், என்னைக் கல்லூரி முதல்வர் தனியே அழைத்துக் கொண்டு போனார். ஒரு பக்கம் ஒதுங்கி உட்கார்ந்தோம். காமராசரின் உபாயம் சிலை திறப்பு விழா முன்னர்க் குறிப்பிட்ட நாளிலேயே நடக்கிறது. அந்த நாள் முதலமைச்சருக்கோ அல்லது கல்வியமைச்ச ருக்கோ ஏற்றதாக அமையவில்லை. எனவே, அமைச்சர்களை வரவேற்கும் பேறு இப்போதைக்கு இல்லை. சிலையைத் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/798&oldid=788637" இலிருந்து மீள்விக்கப்பட்டது