உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 நினைவு அலைகள் வைக்கப் பெருந்தலைவர் காமராசரை அழைத்தோம். அவர் உடனே ஒப்புக் கொண்டாார். அதன் பிறகே மற்ற எவர் எவர் கலந்து கொள்கிறார் என்று கேட்டார். துணைவேந்தர் கலந்து கொள்கிறார் என்று பதில் கூறினோம். “மகிழ்ச்சி. துணைவேந்தரும் நானும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம். நெ. து. சு. துணைவேந்தர் பதவியிலிருப்பது பொது நன்மைக்கு உகந்தது. எனவே ஆட்சியாளர்கள் அவர் பேரில் எரிச்சல் கொள்ள நான் காரணமாய் இருக்கக்கூடாது. அவரைப் பார்த்து அவர் ஏதாவது ஒரு சாக்குக் காட்டி விழாவுக்கு வராமல் இருப்பது நல்லது. இதை நானே சொன்னேன் என்று நெ.து. சுவிடம் தெரிவியுங்கள்” என்று பெருந்தலைவர் கட்டளை யிட்டார். "துணைவேந்தர் கானா நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். விழாவுக்கு நான்கு நாள்கள் இருக்கும்போதுதான் சென்னைக்குத் திரும்புவார்” என்று நாங்கள் பதில் உரைத்தோம். பெயர் இருக்கட்டும் "அப்படியானால் நெ. து. சு. தலைமையில் நான் வீரய்யா வாண்டையாரின் சிலையைத் திறந்து வைப்பேன் என்று அழைப்பு அனுப்பி விடுங்கள். அவர் திரும்பி வந்த அன்றே அவரைக் கண்டு அவர் விழாவிற்கு வராமல் நின்று விட்டால் தப்பாக நினைக்கமாட்டோம். நானும் தப்பாக நினைக்க மாட்டேன் என்று தெரிவித்து விடுங்கள். அப்புறம் அவர் விருப்பப்படி செய்யட்டும்” என்று பெருந்தலைவர் கட்டளையிட்டார். பெரியவர் கட்டளைப்படி அந்த ஆலோசனையைத் தங்கள் முன் வைக்கிறோம். எங்களைத் தவறாக நினைத்து விடாதீர்கள் என்று கல்லூரி முதல்வர் என்னிடம் வேண்டினார். பெருந்தலைவரின் பாசம் வாக்குத் தவறமாட்டேன் “பெருந்தலைவர் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் மேற்படி ஆலோசனையை கூறியிருக்கிறார். எவ்வளவு பாசம் என்னிடத்தில்! பெரியவர், கல்லூரி விழாவில் அரசியல் பற்றிப் பேசப் போவதில்லை. நானும் வாக்குத் தவற முயன்றதில்லை சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறேன். ஒப்புக் கொண்டபடி சிலை திறப்பு விழாவிற்குத் தலைமையேற்கிறேன்” என்று முடிவு சொல்லிக் கல்லூரி முதல்வரை அனுப்பி வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/799&oldid=788638" இலிருந்து மீள்விக்கப்பட்டது