உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப் பாதுகாப்பதில் காமராசரின் ஆர்வம் 75 I விழாவில் கலந்து கொண்டேன் திட்டமிட்டபடி, விழாவன்று காலை தஞ்சை சென்ற டைந்தேன். இந்திய அரசின் பயனிகள் மாளிகையில் இடம் ஒதுக்கி இருந்தார்கள். எனக்கு அடுத்த அறையில் பெருந்தலைவர் காமராசருக்கு இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் காலை 11 மணிக்குத் திருச்சி வழியாகத் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டு வணங்கினேன். சிறிது நேரம் அளவளாவிய பின், 'பூண்டிக்குச் செல்லும்போது என் காரிலேயே வாருங்கள்.” என்று அவர் கட்டளை இட்டார். அப்படியே அவர் காரிலேயே பூண்டிக்குச் சென்றேன். சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக அமைந்தது. பெருங் கூட்டம் நல்ல அலங்காரம். மேடையில் நாங்கள் அமர்ந்ததும், 'தலைமை உரையை இறுதியாக ஆற்றுங்கள். உங்களுக்கு முன்னே நான் பேசி விடுகிறேன்” என்று பெருந்தலைவர் எனக்குக் குறிப்புக் காட்டினார், அதைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டேன். வாழ்த்திதழ்கள் பெருந்தலைவர் காமராசருக்கு அருமையான வரவேற்பு இதழ் ஒன்று வாசித்து அளிக்கப்பட்டது. அதில் அவரது அரசியல் தொண்டினை நீளமாகவும், ஆட்சிச் சாதனைகளைச் சுருக்கியும் பாராட்டி வாழ்த்தியிருந்தார்கள். எனக்கும் அதேபோல் வரவேற்பு இதழ் வாசித்து அளித் தார்கள். அதில், கல்விப் பெருக்கம், பகலுணவு வளர்ச்சி, சீருடைப் பெருக்கம், பள்ளிச் சீரமைப்பு இயக்கம், மேற்பார்வை படிப்புத் திட்டம், உயர்கல்வி வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி விரிவாக, புள்ளி விவரங்களோடு கூறி வாழ்த்தியிருந்தார்கள். என் தலைமையுரை “கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மேற்படி திட்டங்களுக்கும் காரணகர்த்தாவாக விளங்கியவர் கர்மவீரர் காமராசர் ஆவார். நான் அவருக்கு நல்ல கருவியாகப் பயன்பட்டேன். ‘வெட்டி வா என்றால் கட்டி வந்து கொடுத்தேன். ஆர்வத்தோடும் மெய்யான பற்றுதலோடும் மேற்படி திட்டங்களை நிறைவேற்றினேன். அவ்வளவே, நான் செய்தது. அத்திட்டங்' களுக்குத் தமிழக அரசும் முதலமைச்சர் காமராசரும் முழு அளவில், பேராதரவு அளித்ததால் அவை எதிர்பார்த்தபடியே வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/800&oldid=788640" இலிருந்து மீள்விக்கப்பட்டது