உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப் பாதுகாப்பதில் காமராசரின் ஆர்வம் 7B3 நான் திடுக்கிட்டேன். டிங் நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன் என்று நினைத்தேன். என்னை அறியாமலே சொல்லக்கூடாத செய்தி எதையும் வெளியிட்டு விட்டேனா? அப்படி இருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்” என்று வேண்டிக் கொண்டேன். “சொல்லக் கூடாதது ஒன்று மில்லை. என்னை நீங்கள் பாராட்டுவது ஆட்சியில் உள்ளவர்களுக்கு எரிச்சலை ஊட்டுமே, என்பதுதான் என் கவலை” என்று பெருந்தலைவர் கூறினார். ங் - தங்களுக்குச் சேரவேண்டிய பாராட்டை, ஏதோ எனக்குரிய தனிச் சொத்தாக என் வாழ்த்துரையில் கூறியதை மெளனமாக ஏற்றுக் கொண்டால், அது மோசடியாக அல்லவா ஆகிவிடும்” என்று விளக்கம் கூறினேன். “சரி!சரி!” என்று அவர் அப் பேச்சை, முடித்து விட்டார். வீரப்யா வாண்டையர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள், சிறப்பாகவே செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டன.

  • காமராசரின் உரை விரிவாக வெளியாயிற்று. என் பேச்சு செய்தித் தாள்களில் வரவேயில்லை. துணைவேந்தர் நெ. து. சு. தலைமை தாங்கினார் என்று ஒரே வரியில் குறிப்பிடப் பட்டது.

இருட்டடிப்புகளைத் தாங்கிக் கொள்வதும் வாழ்வியலில் ஒரு கூறுதானே! நெ. து. சு. பேச்சை, செய்தியை, வெளியிடாதே சில ஆண்டுகள் ஒடின. நாந்திகம் இராமசாமி ஒருநாள் காலை என்னோடு தொலைபேசியில் பேசினார். ‘அண்ணா நீங்கள் பூண்டிக் கல்லூரி விழாவிலே பெருந்தலைவர் முன்னிலையில் பேசிய பேச்சை எழுத்துக்கு எழுத்து படியெடுத்து வைத்திருக்கிறோம். அப்போது அதை வெளியிடத் தவறி விட்டோம். இப்போது வெளியிட இசைவு தாருங்கள்” என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "அப்போது ஏன் வெளியிடவில்லை?” என்று குறுக்குக் கேள்

கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/802&oldid=788642" இலிருந்து மீள்விக்கப்பட்டது