பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*— நினைவு அலைகள் 'விழர் நடந்து கொண்டிருக்கையிலேயே பெருந்தலைவர் அங்கிருந்த 'நாத்திகம்’, ‘நவசக்தி' நாளிதழ்களின் நிருபர்களுக்கு, தெ. து. சு. வின் பேச்சை வெளியிடவேண்டாம் என்று கட்டளை பிட்டு விட்டார். வெளியிடாவிட்டாலும் எங்கள் அலுவலகத்தில் அது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது” என்று நாத்திகம் இராமசாமி எனக்குப் பதில் உரைத்தார். "அப்படியானால் இப்போது இசைவு கொடுக்க வேண்டியது. பெருந்தலைவரே ஒழிய, நானல்ல. அவர் வெளியிடச் சொன்னால், வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினேன். "நான் இப்போழுதே பெருந்தலைவர் இல்லம் சென்று அவரது இசைவைக் கேட்கிறேன். அவர் இசைவு பெற்ற பிறகு உங்களுக்கும் தகவல் கொடுக்கிறேன்” என்று முடித்தார். எம். பி. தாமோதரன் தந்த செய்தி அரைமணி நேரம் ஆகியிருக்கும். திரு. எம். பி. தாமோதரன் பெருந்தலைவர் வீட்டிலிருந்து என்னோடு தொலைபேசியில் பேசினார். ங், ங் தாங்கள் பூண்டியில் நிறுவனர் சிலை திறப்பு விழாவின்போது பேசிய பேச்சை இப்போது வெளியிடப் பெருந்தலைவரின் இசைவை நாத்திகம் இராமசாமி கேட்டார். பெருந்தலைவரோ மறுத்து விட்டார், அவர் சொன்னது இதுதான். "திரு. பக்தவத்சலம் கட்சி விவகாரங்களிலும், ஆட்சி விவகாரங்களிலும், காமராசர் மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதற்குப் பதிலாகக் 'காமராசர் நிர்வாகத்தில் தலையிட்டதே இல்லை’ என்று நெ. து. சு. பேசியதை இப்போது வெளியிட்டு, அவ் விருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டாம் என்று பெருந்தலைவர் மறுத்து விட்டதோடு, நீங்களும் அதை வெளியிட இசைவு கொடுக்க வேண்டாம் என்று உங்களிடமும் சொல்லும்படி கூறினார்.” பாதுகாவலர் காமராசர் பெருந்தலைவர் மற்றவர்களை எப்படியெல்லாம் பாதுகாக் கிறார் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். புளகாங்கிதம் அடைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/803&oldid=788643" இலிருந்து மீள்விக்கப்பட்டது