உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 நினைவு அலைகள் ஓர் எடுத்துக்காட்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையில் பேராசிரியர் பதவி காலியாயிற்று. அது முறைப்படி விளம்பரப் படுத்தப்பட்டது. அக் குழு விண்ணப்பதாரர்களை நேர்முகப் பேட்டிக்கு அழைத்தது. எல்லாத் தேர்வுக் குழுவுக்கும் துணைவேந்தரே தலைவர். எனவே, என் தலைமையில் தேர்வுக் குழு கூடி ஒவ்வொருவருடைய தகுதியையும் மதிப்பீடு செய்தது. பேட்டிக்கு வந்தவர்களில் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். அவர் சாதித்தது என்ன? ஒன்றுமில்லை. ஏன் என்று குழுவில் கேட்டார்கள். 'வகுப்பு நடத்த வாய்ப்புக் கொடுக்கவில்லை என்று பதில் கூறினார். “எத்தனை ஆய்வுகளுக்கு வழிகாட்டி இருக்கிறீர்கள்?’ என்பது அடுத்த கேள்வி. “ஒருவருக்கும் இல்லை” என்பது பதில், பத்தாண்டு காலம் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு பணியாற்றவில்லை. இருப்பினும், குழு அத்துறை பற்றிய நவீன கருத்துகளைப் பற்றிச் சில கேள்விகளை அவரிடம் கேட்டது. அவர் ஒன்றுக்குக்கூடச் சரியான பதில் கூறவில்லை. எனவே, அவர் பேராசிரியர் பதவிக்குத் தகுதி அற்றவர் என்று வல்லுநர்கள் அனைவருமே ஒருமித்த கருத்தை கூறினர். அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பேட்டிக்கு வந்த மற்றவர்களின் நிலையும் அதுவே. வேறு பல்கலைக் கழகங்களிலும் வகுப்பு நடத்தும் வாய்ப்போ, ஆய்வுக்கு வழிகாட்டும் வாய்ப்போ கிடைக்கவில்லை என்று தெரிந்தது. பெரும்பாலான இந்தியப் பல்கலைக் கழகங்களில் நிலை இதுவே. இது அண்மைக்கால நிலை அல்ல. பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிலையாகும். ஆய்வுக்கு வருவோர் முன்பெல்லாம் வெகு சிலரே ஆவர். அண்மைக் காலத்தில், பல்வேறு காரணங்களால் ஆய்வுக்கு வருவோர் அதிகரித்து வருகின்றனர். இனியாகிலும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களைத் துருப்பிடித்தவர்களாக மாற்றும் சூழல் விலகி, நல்ல வண்ணம் பயன்படுத்தும் நிலை உருவாகட்டும். காலி இடங்கள் நூறு (100) - காரணம் என்ன? நான் துணைவேந்தராகப் பதவியேற்றபோது விரிவுரையாளர். இணைப்பேராசிரியர், பேராசிரியர் ஆகிய மூன்று நிலைகளிலுமாக நூறு இடங்கள்போல் காலியாக இருந்தன. அது டாக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/807&oldid=788647" இலிருந்து மீள்விக்கப்பட்டது