உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை நிர்வாகி துணைவேந்தரே 789 இலட்சுமணசாமி முதலியாரின் குறையல்ல. அதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காமை; இரண்டாவது அத்துறைகளில் வகுப்புகள் நடத்தாமை அல்லது ஆய்வுக்கு எவரும் முன்வராமை. இத்தனை இடங்கள் காலியாக இருப்பதா என்று உரக்கப் புகார் கூறியவர்கள் ஏராளம். அப் புகார்களையும் பொருட்படுத்த வேண்டாமா! எனவே, பல பதவிகளுக்கு விளம்பரம் செய்து தேர்வு குழு நியமித்து நேர்முகப்பேட்டிகளுக்கு ஏற்பாடு செய்தேன். தகுதியானவர்கள் கிடைத்தபோதெல்லாம் அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். பத்தியமாக நடந்து கொண்டேன் புதிய துறைகள் பல தொடங்கப்பட்டன. அவற்றிற்குரிய பேராசிரியர்களையும், பிறரையும் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆறாண்டு காலத்தில் நூற்று ஐம்பது பலநிலை ஆசிரியர்களை நியமித்தபோதிலும், நான் ஒய்வுபெறும்போது எழுபது, எண்பது இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், அவற்றிற்குக் கீழ் மட்டத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டுப் பயிற்சி பெற்று வந்தார்கள். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில், தகுதி, திறமையை ஒருபோதும் நான் விட்டுக் கொடுக்கவில்லை. தகுதியைக் குறைக்காமல், ஷெடியுல்டு பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மகிழ்ச்சியோடு தேர்வு செய்தோம். பெரியாரிடம் சான்றிதழ் பெற்றேன் என் பதவிக்கால நியமனங்களில் எதையும் யாரும் சுட்டிக் காட்டி அதற்கு உள் எண்ணம் கற்பிக்கவில்லை, இது என்னுடைய நேர்மைக்குச் சான்று; அதே நேரத்தில், என் சகாக்களின் பெருந்தன்மைக்கும் சான்று ஆகும். எனவே, எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்த நெருக்கடியிலும் சாதி உணர்வோடு நடந்து கொண்டாரென்று எவரும் குற்றஞ் சாட்ட முடியாத அளவு சமத்துவவாதியாக நெ. து. சுந்தரவடிவேலு செயல்பட்டார் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்’ என்று தந்தை பெரியார் எனது மணிவிழா மலருக்கு எழுதிய வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சான்றிதழ் பெற நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/808&oldid=788648" இலிருந்து மீள்விக்கப்பட்டது