உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை நிர்வாகி துணைவேந்தரே 7.91 முறைகளைக் கொண்டுவந்து காட்டினார். அவற்றை நானே வரிவரியாகப் படித்துப் பார்த்தேன். மாடரேட் செய்ய இடமில்லை என்பது தெளிவாயிற்று. இருப்பினும், 'நெறிமுறை களை மீறி எப்போதாவது மருத்துவத் தேர்வுகளை மாடரேட் செய்துள்ளார்களா?” என்று பன்னிர்செல்வத்தைக் கேட்டேன். அவர் தேர்வுப் பிரிவில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர். நல்ல நினைவாற்றல் உடையவர். உண்மையைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியாதவர். அவர் அப்படி மாடரேட் செய்தததில்லை என்று பதிலுரைத்தார். "நேற்று நடந்த தேர்வாளர் குழுவில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவகையான பரிந்துரைகள் வருகின்றனவாம். பெரும்பான்மையோர் மாடரேட் செய்யும்படியும், அதற்கு அளவையும் பரிந்துரைத்துள்ளார்களாம். சிறுபான்மையோர் அதை எதிர்த்துக் குறிப்பு எழுதியுள்ளார்களாம். இது பற்றிய கடிதம் வந்தவுடனே காலதாமதமின்றிச் செயல்படுங்கள். முன்னர் மாடரேட் செய்ததில்லை என்ற கூற்றை மீண்டும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அக் கூற்று உறுதியானால், மாடரேட் செய்யாமல், தேர்வு முடிவுகளை வெளியிட ஆட்சிக் குழுவிற்கு வழக்கமான - விளக்கமான குறிப்பு எழுதி என் பார்வைக்கு அனுப்புங்கள்” என்று கட்டளையிட்டேன். அன்று மாலை எதிர்பார்த்த பரிந்துரைகள் வந்தன. மாடரேட் செய்ய விதிமுறைகளில் இடமில்லை. இதுவரை மாடரேட் செய்ததுமில்லை. எனவே, அவரவர் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு முடிவை வெளியிடலாம்’ என்ற குறிப்போடு ஆட்சிக் குழுவுக்கு அவை அனுப்பப்பட்டன. "அப்படியே செய்யலாம்’ என்று ஆட்சிக்குழு ஒரு மனதாக முடிவு செய்தது. சில நாள்கள் ஓடின. இதற்கிடையில் மேற்படி தேர்வு பற்றி மூன்று பெரிய அலுவலர்கள், ஆட்சிக் (Յ (ԱՔ உறுப்பினர்கள். தனித்தனியே எழுதிய கடிதங்கள் என் கைக்கு வந்தன. ஏற்கெனவே வெளியிட்ட முடிவுகளை மாற்றித் தாராளமாக மாடரேட்' செய்ய வேண்டும் என்று பெரிய அலுவலர்கள் பரிந்துரைத்தார்கள். திங்கள் தோறும் நடக்கும் ஆட்சிக் குழுக் கூட்டம் வந்தது. கூட்டத் தொடக்கத்திலேயே, அந்த அலுவலர்களில் பெரியவர், மாடரேட் செய்யும் விவகாரத்தைக் கிளப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/810&oldid=788651" இலிருந்து மீள்விக்கப்பட்டது