பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 நினைவு அலைகள் “இத்தகைய விவகாரங்களைக் கூட்ட முடிவில் எழுப்புவதே மரபு. அவற்றை நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டிச் சேர்ப்பது வழக்கமில்லை. எனவே, நான் அதை ஒரு நிகழ்ச்சி நிரலாகச் சேர்க்கவில்லை. ஆனால், அக் கடிதங்கள் நான்கையும் ஆட்சிக் குழுவின் முன் வைக்கக் கையில் கொண்டு வந்துள்ளேன். இப்போது அந்த விவகாரத்தை எழுப்பி விட்டதால் முதலிலேயே முடிவு எடுக்கலாம். எந்த விதிமுறையின் கீழ் மாடரேட் செய்வது?’ என்று சுட்டிக் காட்டினால் நன்றாயிருக்கும்” என்று கூறி ஒவ்வொரு வருடைய கருத்தையும் கேட்டேன். மாடரேட் செய்வதற்கு எந்த விதிமுறையையும் எவரும் சுட்டிக் காட்ட இயலவில்லை. எனவே, மாடரேட் செய்வதற்கில்லை என்று முடிவு செய்தோம். பின்னர் விசாரித்ததில் வேறு ஒரு பெரிய அலுவலர் வீட்டுப் பிள்ளை போதிய மதிப்பெண் பெறத் தவறி விட்டாராம். அவருக்குக் கைகொடுத்துத் துக்கி விடுவதற்காகத்தான் இம் முயற்சி என்று கேள்விப்பட்டேன். அதோடு, அந் நால்வரில் ஒருவர் வீட்டுப் பிள்ளை மருத்துவத் தேர்வு எழுதும் நிலை நெருங்கி வந்ததாம். பிற்காலத்தில் தன் பிள்ளைக்கு இது உதவக்கூடும் என்று அலுவலர்களில் பெரியவர் இதில் தலையிட்டுள்ளார் என்றும் கேள்விப்பட்டேன். 95. வீடு தேடி வந்தார் மிகப் பெரிய அலுவலர் சில நாள்கள் சென்றன. ஒருநாள் அதிகாலை, மிகப் பெரிய அலுவலர் ஒருவர் திடீரென என் வீட்டிற்கு வந்தார். நான் பதறிப் போனேன். வந்தவர் சுற்றி வளைத்துப் பேசவில்லை. நேரிடையாகப் பேச்சைத் தொடங்கினார். மேல் பட்டப் படிப்பில் ஒரு பிரிவைக் குறிப்பிட்டு, "இப் பிரிவில் பல ஆண்டுகளாக எவருக்குமே முதல் வகுப்பு மதிப்பெண்கள் கொடுத்ததில்லை. இவ் வாண்டு என் பிள்ளை அப் பிரிவின் இறுதித் தேர்வு எழுதியுள்ளான். அவனுக்கும் முதல் வகுப்பு வரவில்லை. மதிப்பெண்களைப் பொறுத்தமட்டில் அவனுக்கு மேலே ஒருவன் உள்ளான். நீங்கள் மனம் வைத்து 'மாடரேட்' செய்தால் என் பிள்ளைக்கு முதல் வகுப்புக் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/811&oldid=788652" இலிருந்து மீள்விக்கப்பட்டது