பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 96. நான் திராவிடர் கழகத்துக்காரனா? பெரியார் நினைவுச் சின்னத்துக்கு நன்கொடை 1974 சூன் திங்கள் 22ஆம் நாள் என்று நினைவு விடுதலை’ நாளிதழின். அலுவலகப் பெரியவர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். "தந்தை பெரியார் அடக்கமாகியுள்ள இடத்தில் கருங்கற்கள் பதித்து, சுடரேந்தும் கையை நினைவுச் சின்னமாக வைப்பது என்று முதல்வர் முடிவு செய்துள்ளார். அதற்காக, நன்கொடை ரூபாய் அய்யாயிரம் கொடுத்துள்ளார். இரு அமைச்சர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை போட்டிருக்கிறார்கள். அது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகப் போகிறது. அந்த நன்கொடைப் பட்டியலில், நான்காவது பெயராக உங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமா?” என்று அவர் கேட்டார். 'நன்கொடை கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், முதலமைச்சர் பெயரோடு வரும் பட்டியலில் என் பெயரைச் சேர்க்கக் கூச்சப்படுகிறேன். நாளையோ அல்லது நாளை மறு நாளோ என் பெயரில் நன்கொடை அறிவிக்கலாம்” என்று பதில் கூறினேன். + “உங்கள் அடக்க வுணர்வை நான் மதிக்கிறேன். எனவே, இன்று உங்கள் பெயரை வெளியிடவில்லை. நாளை உங்கள் பெயரில் நன்கொடையை அறிவிக்கிறேன். உங்கள் பெயரிலும் ஆயிரம் ரூபாய் அறிவிக்கட்டுமா?” என்று அவர் என்னைக் கேட்டார். அதற்கு இசைந்தேன். அடுத்த நாள், உரிய காசோலையை அனுப்பி வைத்தேன். நான் தேடாமல் விளம்பரம் கிடைத்தது. அதை நான் மறந்து விட்டேன். நான் திராவிட கழகத்துக்காரனா? இரண்டாண்டுகள் ஓடி விட்டன. நானும் பதவியிலிருந்து ஒய்வு பெற்றேன். இந்திய சோவியத் கலாச்சாரக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வந்த காலமது. அனைத்திந்தியத் தொடர்புடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவரும் நானும் ஒரே மேடையில் பல போது பேச நேர்ந்தது.அவர் ஒருமுறை என்னைத் தனியே அழைத்துக்காதும் காதும் வைத்த மாதிரி ஒரு செய்தியைக் கூறினார். அது என்ன? - “இந்திய அரசு ஆயிரக் கணக்கானவர்களைப் பற்றிப் புலனாய்வு மூலம் தகவல் திரட்டி வைத்துள்ளது. பெரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/813&oldid=788654" இலிருந்து மீள்விக்கப்பட்டது