பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் திராவிடர் கழகத்துக்காரனா? 79.5 நினைவுச் சின்னத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தீர்களாம். அதைச் சுட்டிக்காட்டி, தங்களைத் திராவிடர் கழகத்தார் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.” இதுதான் அவர் சொன்ன செய்தி. சமுதாய இயலிலும், பொருளியலிலும் பெரியாரின் தொண்டன் “நான் திராவிடர் கழக உறுப்பினராக இருந்தால் வேதனைப் படவோ, வெட்கப்படவோ மாட்டேன். எல்லாக் காலத்திலும் எந்த இயக்கச் சார்பில்லாத இந்தியக் குடிமகனாக வாழ்கிறேன். சமுதாய இயலிலும், பொருளியலிலும் நான் பெரியாரின் தொண்டன். பெரியாரின் அரசியல் பற்றி என் நிலை என்ன? தன்னிலை விளக்கத்துக்காகவே “கலைஞர் கருணாநிதி 1965 மார்ச் திங்கள் சென்னை சட்ட மன்றத்தில் என்னைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். என்ன குறை? அவர் ஊர் ஊராகச் சென்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டுகிறார். ஒருமைப்பாடு அரசியல் விவகாரம் எனவே, இயக்குநர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்’ என்று கலைஞர் மதிப்பிட்டார். அப் பேச்சு செய்தித் தாள்களில் வெளிவந்தது. என்னைப் பற்றிப் புலனாய்வு செய்தவர் நாணயமானவராக இருந்தால் இதையும் எடுத்துக் காட்டியிருக்க வேண்டாமா? அப்போதல்லவா அரசுக்கு உண்மையான மதிப்பீடு கிடைக்கும்? நெருக்கடி நிலையை அறிவித்தால், அரசியல் வாதிகளின் - அலுவலகங்களின் விருப்பு வெறுப்புக்கேற்பத் தவறான கணிப்புகள் பெருகிவிடும் என்பது புலனாகிறது. இதைச் சொல்வது எதையும் எதிர்பார்த்து அல்ல. தன்னிலை விளக்கத்திற்காகவே. பெரியார் பற்றி விளக்கம் “பெரியார் நிலை பற்றியும் ஒர் விளக்கம். பெரியார் திராவிட நாடு பிரிவினைக்கு வாதாடி வழக்குத் தொடுத்தாரே தவிர, போர் தொடுத்தார் அல்லர். எனவேதான் ஒவ்வோரு முறையும், இந்தியா அயல்நாட்டவரால் தாக்கப்பட்டபோதெல்லாம் பெரியார் சிறிதும் தாமதியாமல் இந்திய அரசுக்கு ஆதரவு தரும்படி அறிக்கைவிட முன் வந்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி இந்திய அரசுக்கு ஆதரவு திரட்டினார். பெரியாரின் வழக்காடலைச் சதியாக துரோகமாக எண்ணிக் கொண்டு எதிர்ப்பதால் எந்தச் சிக்கலும் தீர்வதில்லை.” இப்படி அந்தச் செய்தி சொன்னவருக்கு விளக்கமளித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/814&oldid=788655" இலிருந்து மீள்விக்கப்பட்டது