உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மீண்டும் துணைவேந்தாக ஜி._ஆர்-டி-விரும்பினார் 797 நான் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதைக் கவனித்த திரு. தாமோதரன், என் தம்பி இப்போது சென்னையிலிருக்கிறார். உங்களுக்கு ஆதரவான பரிந்துரையை இப்போதே அவரிடம் சொல்லி விடுகிறேன். அவர் இன்று மாலை முதலமைச்சரைக் கானப்போகிறார். அப்போது சொல்லி விட்டு வருவார்” என்று என்னிடம் கூறினார். “அவசரப்பட வேண்டுமா?’ என்று நான் அவரைக் கேட்டேன். ங்ங் நல்லதை உடனுக்குடன் செய்து விடுவதே சரி. உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதியுங்கள்” என்று திரு. தாமோதரன் கேட்டுக் கொண்டார். அதற்குமேல் மறுப்பது நாகரிகமாயிராது என்று கருதி அதற்கு உடன்பட்டேன். தாமோதரன் என் எதிரில் தம் தம்பியோடு தொலைபேசியில் பேசினார். நெ. து. சு.வுக்கு ஆதரவாகப் பேசு "துணைவேந்தர் அறையிலிருந்து பேசுகிறேன். மூன்றாம் முறையும் அவரே அப் பதவியில் இருப்பதற்கு அவருடைய இசைவைப் பெற்று விட்டேன். இன்று மாலை முதலமைச்சரைக் கானும்போது நெ. து. சு.வுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டு வா” என்று தம் தம்பிக்குக் கட்டளையிட்டார். கோவிந்தராஜ-லுவைச் சந்தித்தேன் கோவிந்தராஜுலு கீழ்ப்பாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருப்பதாக அறிந்து கொண்டேன். நானும் நண்பராகி அவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்வது பொருத்தமாயிருக்கும் என்று தோன்றிற்று. அதைத் தாமோதரனிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் தம் தம்பியைத் தொலைபேசியில் அழைத்தார். நான் அவரைக் காண அங்கு வரவிருப்பதாகச் சொல்லி, எப்போது வரலாம் என்று கேட்டார். 'துணைவேந்தர் என்னைப் பார்க்க இங்கு வரத் தேவை இல்லை. நானே அவரை அவர் இல்லத்துக்குச் சென்று காண்கிறேன்’ என்று கோவிந்தராஜுலு பதிலுரைத்தார். நானும் என் மனைவி காந்தம்மாவும் கோவையில் திரு. கோவிந்தராஜுலு இல்லத்தில் சிலமுறை தங்கியிருக்கிறோம். எனவே, அவர் சென்னை இல்லத்தில் அவரைப் பார்ப்பதில் எனக்குக் கூச்சம் ஏற்படவில்லை. நான் கோவிந்தராஜூலுவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/816&oldid=788657" இலிருந்து மீள்விக்கப்பட்டது