உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 நினைவு அலைகள் எரியூட்டினேன் == நவம்பர் 24 ஆம் தேதி நடுப்பகல் கெளதமன் வந்து சேர்ந்தார். ஏற்கெனவே திட்டமிட்டபடி, அன்று மாலை அயன் புரம் மயானத்தில் காந்தம்மாவின் உடல் எரியூட்டப்பட்டது. அந்த நேரத்தில் நான் துயரைத் தாங்க மாட்டேன் என்று என்னையும் எனக்குத் துணையாக திருஆர். பண்டரிநாதனையும் ஒரு காரில் அமர்த்தி அதிலேயே வரும்படி கட்டாயப்படுத்தி விட்டனர். சிறிதுதுரம் பேரன் துரைசாமி வண்டியில் வந்தான். ஓரிடத்தில் வேன் நின்றதும் சட்டென்று கீழே இறங்கி யார் தடுத்தும் கேளாமல், இறுதிவரை நடந்தே வந்தான். அவனைப் பாதுகாக்க ஒருவரை உடன் அனுப்பவேண்டியிருந்தது. மயானத்தில், நாகை முருகேசன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். கல்யாணசுந்தரம், திரு. கி. வீரமணி, டாக்டர் பி. திருஞானசம்பந்தம், டாக்டர் ரஷ்யா, கே. பஞ்சாட்சரம், நெடுமாறன் முதலியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள். இரங்கல் கூட்டம் 5-12-1984 அன்று பெரியார் திடலில், நீதிபதி. வேணுகோபால் அவர்கள் தலைமையில், இரங்கல் கூட்டம் நடந்தது. திருவாளர்கள் கி.வீரமணி, நாகை. முருகேசன், இராம. அரங்கண்ணல், அறிவழகன், ஈஸ்வரன், கெளதமன் ஆகியோர் என் காந்தம்மாவுக்கு இரங்கல் உரையாற்றினார்கள். காந்தம்மாவுக்கு எரியூட்டும் வேதனையான செயலை நான் செய்ய நேரிட்டது. தாங்க முடியவில்லை "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இறப்பு தவிர்க்க முடியாதது. இயற்கையின்பாற்பட்டது. இதை எனது ஆறாவது அறிவு தெளிவு படுத்துகிறது. இருப்பினும், காந்தம்மாவை மறக்க முடிவதில்லை. நாள்தோறும் நினைக்கிறேன்; பலமுறை நினைக்கிறேன், உருகிப் போகிறேன். எனக்கு எல்லாமாக இருந்த காந்தம்மாவின் மறைவைத் தாங்கிக்கொள்வது எளிதாக இல்லை. காந்தம்மா என் காதல் மனையாள், வாழ்க்கைத் துணையாள்: நாற்பத்து நான்காண்டுகள் என்னை இமையெனக் காத்தவர். என்னைக் குடும்பப் பொறுப்புகளோ, தொல்லைகளோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/831&oldid=788674" இலிருந்து மீள்விக்கப்பட்டது