உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி காந்தம்மாள் என்னை விட்டுப் பிரிந்தார் B11 என்னைப் பரிசோதித்தார் வேறு ஒரு அறையிலிருந்த சாய்வு நாற்காலியில் என்னைப் படுக்க வைத்தார். என் இரத்தக் கொதிப்பை அளந்து பார்த்தார். “கவலைப்படாதீர்கள்” என்று என்னைத் தேற்றியபடியே மீண்டும் காந்தம்மாவைப் பார்க்க அழைத்துச் சென்றார். காந்தம்மாவின் உடலைத்தான் கண்டேன். அதற்கு முதல்நாள், காந்தம்மாவின் அக்காள் குஞ்சிதத்தின் மகன் கு. கு. கெளதமன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வருவ தாகச் செய்தி வந்தது. எனவே, அவன் வரும்வரை வைத்திருப்பதற் காக உடலுக்குப் பதப்படுத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரமுகர்களின் ஆறுதல் - அஞ்சலி ஏற்பாடுகள் முடிந்து, காந்தம்மாவின் உடலைச் செனாய் நகர் இல்லத்துக்குக் கொண்டு வரும்போது அங்கே பலர் காத்திருந் தார்கள். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணி, அவருடைய மனைவி மோகனா, நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் அவரது அத்தை திருமதி. விசாலாட்சி அம்மையார் விரைந்து வந்து என்னைப் பத்திரமாகக் காரிலிருந்து இறக்கி அழைத்துப் போய் ஒரு பக்கமாக உட்கார வைத்து நெடுநேரம் உடனிருந்து, ஆறுதல் கூறினார்கள். மாண்புமிகு அமைச்சர்கள் ஆர். எம். வீரப்பன், சி. அரங்க நாயகம், க. இராசாராம், நீதிபதிகள் மாண்பமை சி. நடராசன், மோகன், முன்னாள் நீதிபதிகள் நாராயணசாமி முதலியார், ஆர்.சதாசிவம் ஆகியோர் வந்து காந்தம்மாவிற்கு மரியாதை செலுத்தினர். டாக்டர் கலைஞர் கருணாநிதியின் துணைவியார் திருமதி. தயாளு அம்மையார், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவி டாக்டர். விசாலாட்சி அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன் ஆகிய பலர் வந்து கண்டு அஞ்சலி செய்தனர். சோவியத் நாட்டின் இணைத்துதர் திரு. செரபோவ், சோவியத் கலாச்சார மையத்தின் இயக்குநர் திரு. மல்சனோவ், சோவியத் தகவல் துறைப்பிரிவின் தலைவர் திரு. பரலோவ் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/830&oldid=788673" இலிருந்து மீள்விக்கப்பட்டது