பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 நினைவு அலைகள் வீதியில் அமைதி வீடு திரும்புகையில், தெருக்களில் அமைதியைக் கண்டேன். என் தம்பி சிவானந்தத்தின் பேரன் - லெ. துரைசாமியை வீட்டுக்கு அழைத்துப் போகலாமென்று சேத்துப்பட்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளிக்குச் சென்றேன். அரைமணி நேரத்திற்கு முன்னர், பள்ளிக்கூடம் மூடப்பட்ட தாகவும், பிள்ளைகள் எப்படியாவது வீடு போய் சேரப் புறப்பட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டேன். அங்கிருந்து செனாய் நகரில் உள்ள என் வீட்டிற்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வழி நெடுகிலும் சமூக விரோதிகள் கூட்டத்தின் அட்டகாசம். மீண்டும் மூச்சுத் திணறல் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது காந்தம்மாவுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அது அவர் உடல்நலம் பெறுவதைப் பாதித்தது. மெல்ல எப்படியோ சமாளித்து குணமாகி வருவதாகத் தோன்றியது. அவ் வேளை, புயல் காற்றும் மழையும் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டு காந்தம்மாவுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. - மருத்துவ விடுதியிலேயே தங்கினேன் நவம்பர் 20ஆம் தேதி நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. 20ஆம் தேதி இரவு டாக்டர்கள் அனுமதி பெற்று நானும் அங்கேயே தங்கி விட்டேன். பொழுது விடிய காந்தம்மாவின் நிலைமை சற்றுச் சீராயிற்று. நான் இரவு முழுவதும் அங்கேயே இருந்ததைப் பற்றிக் காந்தம்மா கேள்விப்பட்டு வருந்தினார். 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் காந்தம்மாவின் கட்டாயத்தால் நான் வீடு திரும்பினேன். பின்னர் காந்தம்மாவின் நிலை படுமோசமாகி விட்டது. உயிர் பிரிந்தது நவம்பர் 22ஆம் தேதி காலை என் காரோட்டி தாயுமானவன், உடனே மருத்துவமனைக்கு வரும்படி டாக்டர் சொன்னதாகக் கூறி என்னை அழைத்துக்கொண்டு போனான். அவ்வளவு அதிகாலை யில், டாக்டர். அமரேசன் அங்கு வந்து சேர்ந்தார். காலை 7-45க்கு நானும், அமரேசனும் அருகிலிருக்க, காந்தம்மா உயிர் நீத்தார். என் தலை சுற்றியது. கால்கள் தள்ளாடின. கண்ணிர் வழிந்தது. டாக்டர் அமரேசன் கைத்தாங்கலாக என்னை அழைத்துப் போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/829&oldid=788671" இலிருந்து மீள்விக்கப்பட்டது