பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி காந்தம்மாள் என்னை விட்டுப் பிரிந்தார் B09 திரு.பவனந்தி-என் தம்பி நடராசரின் மகன். திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளர் - டாக்டர். எம். எஸ். அமரேசனை அழைத்து வர நேரில் சென்றார். சிறிது நேரத்தில் டாக்டர் அமரேசன் வந்து சேர்ந்தார். சோதித்தார். ஊசி போட்டார். டாக்டர். பாண்டியனை - என் தம்பி நடராசன் மகன் - அன்றிரவு என் வீட்டில் தங்கி, தேவைப்பட்டால் மீண்டும் ஊசிபோட, ஏற்பாடு செய்து விட்டுப் போனார். மறுநாள், காலையும் வந்தார். ஒரு நாளைக்கு இருமுறை வந்து காந்தம்மாவுக்கு மருத்துவம் செய்தார். அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வரை, வீட்டிலிருந்தபடியே மருத்துவம் செய்யப் பட்டது. மருத்துவ மனையில் சேர்த்தால், சில மருத்துவ வசதிகள் அதிகமாகும் என்று, டாக்டர் கருதினார். எனவே அக்டோபர் 18ஆம் நாள் சென்னை பொது மருத்துவ மனையில் சிறுநீரக மருத்துவப் பிரிவில் காந்தம்மா சேர்க்கப்பட்டார். 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். பிரதமர் சுடப்பட்டார் அக்டோபர் 31 ஆம் நாள் நடுப்பகல் நேரத்தில் அங்கே வந்த டாக்டர் ஒருவர் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை என் காதில் போட்டார். காந்தம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்றேன். டாக்டர் காந்தம்மாவின் அறைக்குள் போகாமலேயே வேறு பக்கமாகப் போய் விட்டார். 18 ஆம் நாள் முதல், பல மணி நேரம் காந்தத்தின் அறைக்குப் பக்கத்திலுள்ள தாழ்வாரத்தில் காத்துக் கிடப்பேன். அன்றும் அப்படியே இருந்தேன். காந்தம்மாவுக்குத் தெரிந்து விட்டது சில மணித்துளிகளில், காந்தம்மா என்னை அழைத்தார். நான் உள்ளே சென்றதும், “இங்குள்ள பணியாட்கள், பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டாரென்று பி. பி. சி. வானொலியில் சொன்னதாகக் கூறுகிறார்கள். அது பொய்யாயிருந்தால் நல்லது. உண்மையானால் நாட்டிற்குப் பேரிழப்பு. எப்படியிருப்பினும், நகரத் தெருக்களில் கூட்டம் கூடிவிடும். வெளியே நடமாடுவது தொல்லையாகி விடலாம். எனவே, உடனே புறப்பட்டு வீடு போய்ச் சேருங்கள். அமளி இல்லாதிருந்தால் மாலை வரலாம்” என்று சொல்லி என்னை வீட்டுக்கு அனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/828&oldid=788670" இலிருந்து மீள்விக்கப்பட்டது