உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 நினைவு அலைகள் மெய்மறந்து கல்விப்பனி ஆற்ற முடிந்தது. மேற்படி இழப்புக் களெல்லாம் குத்து வெட்டுகள் போல் நோகையில் இடியென விழுந்த இறப்பு ஒன்றைப் பற்றி வேதனையோடு எழுதுகிறேன். காந்தம்மாவின் உடல் நலிவு 1984ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் அத்திங்கள் 12ஆம் நாள் வரும் எனது 73ஆவது பிறந்தநாள் விழா பற்றி என் மனைவி காந்தம்மா திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். நான் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகும், என்னுடைய பிறந்த நாளன்று 250 முதல் 300 பேர்கள்வரை அன்பர்கள் நேரில் வந்து என்னை வாழ்த்தி விட்டுச் செல்கிறார்கள். வழக்கம்போல், அவர்களுக்குச் சிற்றுண்டி அளித்து விருந்தோம்பி அனுப்புவதற்கு ஏற்பாடுகளைக் காந்தம்மா செய்து கொண்டிருந்தார். காந்தம்மாவின் உடல்நிலை சில ஆண்டுகளாகவே நலிந்த படியே இருந்தது. அந்த ஆண்டு மிகவும் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. எனவே, காந்தம்மாவிடம் “வெறும் காப்பி கொடுத்து ஒரு பழத்தை அளித்து அனுப்பினால் போதாதா? வழக்கமான விருந்தோம்பலைச் செய்ய உடல்நிலை இடம் கொடுக்குமா?’ என்று கேட்டேன். விருந்து வேண்டும் “பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்து விடுகிறேன். சிற்றுண்டியைச் சுருக்க வேண்டாம்” என்று அன்புக் கட்டளை இட்டார். அதன்படியே, அத் திங்கள் 12ஆம் நாள், பிறந்த நாள் விழா உபசரிப்பு நடந்தது. விழாவுக்குச் சென்றிருந்தேன் அன்று மாலை, தேசிய ஆசிரியர் பேரணியின் சார்பில், சென்னை சோவியத் கலாசார மையத்தின் கலையரங்கத்தில் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக் கூட்டம் நடந்தது. நான் அங்குச் சென்று திரும்பி வருகிறபோது, காந்தம்மா மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். மூச்சுத் திணறல் அப்போது பல நாள்களாகத் தொலைபேசி வேலை செய்யாதிருந்தது. எனவே, டாக்டரை உடனடியாக அழைக்க முடியவில்லை. தற்செயலாக அவ் வேளை என் இல்லத்திற்கு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/827&oldid=788669" இலிருந்து மீள்விக்கப்பட்டது