பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி காந்தம்மாள் என்னை விட்டுப் பிரிந்தார் BO7 மணியம்மையாரின் தியாகம் மற்றொரு மறைவு என்னைப் பெருங் கவலையில் ஆழ்த்தியது. திருமதி. ஈ.வெ.ரா. மணியம்மையார் மறைந்தபோது நான் துயரத்தில் மூழ்கினேன். மணியம்மையாரின் விருந்தோம்பலைப் பலமுறைப் பெற்றவன் நான். அதற்கே நான் அவர்கள்பால் மதிப்புடையவன். நம் தமிழ்ச் சமுதாயம் தந்தை பெரியாரின் நீண்ட நெடிய சோர்வற்ற தொண்டால் விழித்தெழுந்தது. பன்னெடுங்காலம் அவல வாழ்வு வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களை எழுச்சியுறச் செய்த பெரியார் 95 வயதுவரை வாழ்ந்தார். அந்த வயதிலும் ஊர் ஊராகச் சென்று ஒய்வின்றிப் பொதுத் தொண்டாற்றினார். அவர் பல நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், 95 வயது வரை பெரியார் வாழ முடிந்தது என்றால் அதற்குக் காரணம் மணியம்மையாரின் தியாகமே ஆகும். தன்னை மறந்து, பெரியாரை நினைத்து அவரைப் பராமரிப்பதில் பேணிக்காப்பதில் அம்மை யாரின் பங்கு மிகவும் பெரிது. தம்முடைய சொத்து முழுவதையும் கல்வி அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டார். என்னே அவரது தியாகம்! 99. என் துனைவி காந்தம்மா என்னை விட்டுப் பிரிந்தார்! தொடர் இழப்பு என்னைக் கவர்ந்த பெரியவர்கள், என்னுடன் அலுவல் பார்த்தவர்கள், என் கீழ்ப் பணி புரிந்தவர்கள் ஆகியோரில் எவராவது மறைந்தால் அது என்னை வேதனைப் படுத்தும். பெரிய முள் குத்தியது போலப் பதறிப் போவேன். ஆனால், எனது முழுநேர அலுவலலை 14 மணிநேர இலட்சியப் பணியாக மாற்றிக் கொண்டு திரிந்த அலைச்சலில் அப்புண் எளிதில் ஆறிவிடும். 1959இல், எங்கள் ஒரே மைந்தன் கா. சு. திருவள்ளுவன் மறைய, 1960இல் என் மாமனார் திருவாரூர். சுப்பிரமணியம் மறைய, 1961இல் திருமதி. குஞ்சிதம் குருசாமி மறைய, 1962இல் என் தாய் மாமன் திரு. நெ. கோ. சுந்தரசேகரன் மறைய, அதே ஆண்டு அக்டோபரில் குத்துாசி குருசாமியார் மறைய அத்தனையையும் தாங்கிக்கொண்டு, o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/826&oldid=788668" இலிருந்து மீள்விக்கப்பட்டது